எதனால் காவேரி வற்றிவருகிறது?
இந்தியாவிலுள்ள பெரும்பாலான நதிகளைப் போல், காவேரியும் காடுகளிலிருந்தே பிறக்கிறது. முன்காலத்தில் இருந்தே இப்பகுதியில் காடுகளும் மரங்களும் நிறைந்திருந்தது. விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் தாவரக் கழிவுகள் மூலமாகவும் மண்ணிற்கு ஊட்டச்சத்தும் உயிர்மச்சத்தும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த உயிர்மப் பொருள் மண்ணின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியை அதிகரித்து, அந்நீர் காவேரியில் ஓடுவதற்கு வழிசெய்தது.
மரங்கள் குறையத் துவங்கியதும்...
மக்கட்தொகை அதிகரிப்பாலும், திறனற்ற விவசாய முறைகளாலும் மரப்போர்வை அதிகளவில் குறைந்து, மண்ணிற்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது. இப்போது தண்ணீர் ஈர்க்கமுடியாமல் போவது மட்டுமல்ல, மண்ணரிப்பும் வேறு ஏற்படுகிறது. தண்ணீர் ஈர்க்கும் திறனை மண் இழந்ததால், காவேரியின் நீரோட்டமும் குறைகிறது. இதனால் காவேரி ஆறு வற்றிக் கொண்டே போகிறது. குறைந்து வரும் தண்ணீர் வளமும், வளமிழந்து கொண்டிருக்கும் மண்ணும் விவசாயியை பெருமளவில் பாதிக்கிறது. வாடும் பயிர்களும் அமிழ்த்தும் கடனும் அவரை தீராத துயரத்தில் ஆழ்த்துகிறது.