பாரதப்புழா

ஆற்றின் நீளம்

251 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

5397 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

40 லட்சம்

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

கேரளா, தமிழ்நாடு

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

பாலக்காடு (131,019 மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்k: குறைவு
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: அதிகம்
  • மரங்கள் அழிந்த மொத்த அளவு: 31%(1973-2005)
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: நடுத்தர அளவிலிருந்து அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • பாரதபுழா கேரளாவின் இரண்டாவது நீளமான நதியாகும். மாநிலத்தின் 10% பரப்பளவிற்கு இந்நதி பாய்கிறது.
  • 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் இந்நதியால் பலன்பெறுகிறது.
  • மீன்களின் பல்லுயிர் தன்மையின் அடிப்படையில் இந்நதி கேரளாவின் வளமிக்க நதியாக கருதப்படுகிறது. இதிலுள்ள 117 வகை உயிரின வகைகளில் மூன்று உயிரினங்கள் வேறெங்குமே இல்லை. இதில், 14 உயிரினங்கள் தற்போது அழியும் அபாயத்தில் உள்ளன.
  • கிராமப்புறங்களில் சுமார் 5.9 லட்சம் மக்களுக்கும், நகர்ப்புறங்களில் 1.73 லட்சம் மக்களுக்கும் இதன்மூலம் குடிநீர் கிடைக்கிறது. கோயில் நகரமான குருவாயூர் உட்பட மூன்று மாவட்டங்களின் 12 நகராட்சிகளும், 175 கிராம பஞ்சாயத்துகளும் இந்நதியைச் சார்ந்தே இருக்கின்றன

சமீபத்திய பேரழிவுகள்

வற்றாத ஜீவநதியான பாரதபுழா, பருவமழைக்காலம் முடிந்து ஒருசில வாரங்களிலேயே காய்ந்துவிடுகிறது. மரங்கள் அழிப்பு, கிளை நதிகளின் வறட்சி மற்றும் பொய்த்துப்போகும் பருவமழை ஆகிய காரணங்களால் கடந்த சில வருடங்களில் இந்நதியின் வழித்தடங்கள் காய்ந்து வறண்டுபோகும் நிலை உருவாகியுள்ளது.

ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம்

பாரம்பரியமாக இந்நதி நிலாவாக அறியப்படுகிறது. கேரள கலாமண்டலம், பிரபலமான ஒரு பாரம்பரிய கலை மையம், இந்த நதிக்கரையில் அமையப்பெற்றுள்ளது. இலக்கிய மேதைகளான M.T.வாசுதேவன் நாயர் மற்றும் O.V. விஜயன் ஆகியோர் இந்நதியின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள். ஒவ்வொரு வருடமும், முன்னோர்களுக்கு செய்யப்படும் பித்ரு தர்ப்பனம் இந்நதிக் கரையில் நிகழ்த்தப்படுகிறது.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x