பீமா


ஆற்றின் நீளம்

861 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

70,614 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

1,75,00,000 (2011)

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

சோலாப்பூர் (9,51,000 லட்சம் மக்கள் தொகை), புனே – (31 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 46%
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவு
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: மிக அதிகம்
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • பீமாவின் வடிநிலம் பகுதி கிருஷ்ணா வடிநிலத்தின் ஒரு பகுதியாகும். இந்நதி, அதன் இணைநதியைப் போலவே விவசாயத்திற்கு பெரும்பங்களிக்கிறது. கரும்பு, கோதுமை, சிறுதானியங்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்படும் சுமார் 14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பீமா வடிநிலப் பகுதி மட்டுமே துணைநிற்கிறது.
  • இதன் கிளைநதிகள் புனே நகரின் குடிநீர் ஆதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. புனே, சதாரா, சங்லி, கோலாப்பூர் மற்றும் சோலாபூர் ஆகிய மாவட்டங்கள், தங்களுடைய குடிநீர் மற்றும் நீர்ப்பாசன தேவைக்கு இந்நதியை சார்ந்தே உள்ளன. மேலும் மும்பையின் ஒருபகுதி மின்சார தேவையை பூர்த்தி செய்யும்விதமாக 150 MW மின்சக்தி கொண்ட மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது
  • பீமா வடிநில பகுதி மிகச்சிறந்த பல்லுயிர் வசிப்பிடமாக திகழ்கிறது. பீமாசங்கர் வனவிலங்கு சரணாலயம் உட்பட 6 சரணாலயங்களை கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநில விலங்கான “தி இந்தியன் ஜெயின்ட் அணில்” மற்றும் “தி கிரேட் இந்தியன் பஸ்டர்டு பறவை” ஆகியவற்றின் புகலிடமாக திகழ்கிறது. இது அழிந்துவரும் தி கிரேட் இந்தியன் பஸ்டர்டு பறவைக்கான எஞ்சியிருக்கும் சரணாலயங்களில் ஒன்றாகும். இப்போது இந்த பறவைகள் மொத்தமே இருநூற்றைம்பதுதான் உள்ளன.
  • ரெஹெக்குரி (Rehekuri Blackbuck Sanctuary) சரணாலயம், மயூரேஷ்வர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் உஜ்ஜெயின் வெட்லேண்ட் போன்றவை உட்பட மற்ற சரணாலயங்களும் உள்ளன.
  • இங்கிருக்கும், பழமையானதும், பயனுள்ளதானதுமான நீர் பகிரல் முறை சமீப காலத்தில் வேலைசெய்யாமல் போய்விட்டது. இதனால், இங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருகால கட்டத்தில் இந்த நதியின் மூலம் சுமார் 3,50,000 ஹெக்டேர் நிலப்பகுதி நீர்ப்பாசனம் பெற்று வந்தது. ஆனால், இன்றோ நீர் பற்றாக்குறையால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் இப்பகுதியில் கருகி வெட்டப்பட்டு வருகின்றன.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

பீமாவின் வழித்தடங்களில் எண்ணற்ற கோயில்கள் அமைந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், இந்நதி தொடங்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பீமாசங்கர் ஜோதிர்லிங்கம் என்ற கோயில் அமைந்துள்ளது. பந்தர்பூரில் உள்ள புனித யாத்திரை செல்லக்கூடிய, மிக முக்கியமான தலமான விட்டலா கோயில் இந்நதிக்கரையில் அமைந்துள்ளது.

பீமாவும் கிருஷ்ணாவும் இணையும் சங்கமம் எனும் இடத்தில் பல்வேறு மக்கள் வந்து புனிதநீராடிச் செல்கின்றனர். அஷ்டவிநாயகர் ஆலயங்களில் ஒன்றான சித்திவிநாயகர் கோயில் சித்தாதேக்கில் அமைந்துள்ளது.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x