முசி


ஆற்றின் நீளம்

240 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

11,212 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

90,11000 லட்சம்

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

தெலுங்கானா

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

ஹைதராபாத் (60,80,000 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 38%(1969-2001)
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவு
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: குறைவு
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • இரண்டு முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான, ஆஸ்மன் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் ஆகியவை முசி நதியின் மீதும் அதன் கிளைநதிகளின் மீதும் கட்டப்பட்டுள்ளன. இவை ஹைதராபாத்திற்கு குடிநர் வழங்குகிறது.
  • கிருஷ்ணா மற்றும் கோதாவரியின் கழிமுகப் பகுதிகள் ஒன்றுக்கொன்று மிக அருகிலிருப்பவை. இவை இணைந்து 12,700 ச.கி.மீ பகுதியிலுள்ள ஏறக்குறைய ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கிறது.
  • ஹைதராபாத் வழியாக ஓடும் நதி, பின் தெலுங்கானா வழியாக நல்கொண்டா மாவட்டத்திற்கு சென்று விவசாய நீர்ப்பாசனத்திற்கும் உள்ளூர் தேவைகளுக்கும் பயன்படுகிறது.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

பழங்காலத்தில் இந்நதி முச்சுகுண்டா என்று வழங்கப்பட்டது. மஹாபாரத காலத்திற்கு தொடர்புடைய அனந்தகிரி மலையை பிறப்பிடமாக கொண்டுள்ளது.

கிருஷ்ணா நதியை இது வடபள்ளி எனும் இடத்தில் சந்திக்கிறது. 12ஆம் நூற்றாண்டில் காகத்திய அரசர்களால் கட்டப்பட்டுள்ள மீனாட்சி அகஸ்தீஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில் இங்கு அமையப் பெற்றுள்ளது.

மேலும், வடபள்ளியில் வியாச மகரிஷி தியானம் செய்ததாக சொல்லப்படும் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி கோயிலொன்றும் அமைந்துள்ளது.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x