யமுனா


ஆற்றின் நீளம்

1376 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

3,66,223 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

12,80,00,000 (2001)

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

உத்தரகண்ட், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம்

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

புதுதில்லி (1.9 கோடி மக்கள் தொகை), ஆக்ரா (10 லட்சம் மக்கள் தொகை), அலகாபாத் (10 லட்சம் மக்கள் தொகை), மதுரா (3,49,336 மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 60% (உலக வங்கி அறிக்கையின்படி)
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவிலிருந்து நடுத்தரம்
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: அதிகம்
  • மரங்கள் அழிந்த மொத்த அளவு: 11% (1985-2005)
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: மிக அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • யமுனையும் கங்கையும் சங்கமிக்கும் பகுதியில் யமுனை நதி உயிர் வளமிக்க நதியாக திகழ்கிறது.
  • ஏறக்குறைய 270 கோடி லிட்டர் அளவிற்கு இந்நதியிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. டெல்லியின் தண்ணீர் தேவையில் 70%க்கும் மேல் இந்நதி பங்களிக்கிறது.
  • 60 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பானசத்தை வழங்குவதுடன், 400 மெ.வா நீர் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவ வாழ்வில் ஆழமாக இணைந்தது யமுனை நதி! பாண்டவர்களின் தலைநகரமாக திகழ்ந்த இந்திரபிரஸ்தம் யமுனை நதியின் கரையிலேதான் அமையப்பெற்றது. தற்போது அது நவீன நகரமான டெல்லியாக கருதப்படுகிறது.

யமுனை நதி கங்கையுடன் சங்கமிக்கும் பிரயாக் எனும் இடம் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இங்கு கும்பமேளா திருவிழா நிகழ்கிறது.

கங்கையின் பிறப்பிடமான யமுனோத்ரி, சோட்டா சர்தம் (Chota Chardham) புனிதயாத்திரையில் ஒன்றாகும். மற்ற மூன்று இடங்கள் கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகும்.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x