முன்னெப்போதையும் விட, இப்போது நதிகளை காக்க நாம் செயல்புரிய வேண்டும். #RallyForRivers

உங்கள் ஆதரவை “நதிகளை மீட்போம்” இயக்கத்திற்கு வழங்குங்கள்

“நதிகளை மீட்போம்” என்பது நம் நதிகளைக் காப்பதற்கான நாடு தழுவிய விழிப்புணர்வுப் பேரணி. பல கோடி மக்களின் ஆதரவைப் பெற்று, அதன் அடிப்படையில் நம் அரசாங்கம் ஒரு முறையான நதிகாப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதில் நீங்கள் பங்கெடுக்க ஒரு எளிமையான வழி, உங்கள் மின்னஞ்ச்சல் முகவரியைக் குறிப்பிட்டு, இதற்கான உங்கள் ஆதரவை உறுதி செய்வது. முறையான நதி காப்புத் திட்டத்திற்கு இது ஒரு பிரஜையின் வாக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கங்கா, கிருஷ்ணா, நர்மதா மற்றும் காவேரி போன்ற நமது பிரம்மாண்ட நதிகள் பல, வேகமாக வற்றி வருகின்றன. துரிதமாக நாம் செயல்படாவிட்டால், அடுத்த தலைமுறையை நாம் கையறுநிலையில், சச்சரவில் விட்டுச்சென்றதாய் வருங்காலம் சொல்லும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஆறுகள் நம்மை பராமரித்து, ஊட்டமளித்து வந்தன. நம் நதிகளுக்கு உயிரூட்ட இதுவே சரியான தருணம்

ஆற்றின் இருகரைகளிலும் குறைந்தது 1 கிமீ பரப்பளவிற்கு மரங்கள் நடுவது, நம் ஆறுகளை காக்க மிகச் சுலபமான ஒரு வழி. அரசு நிலத்தில் வன மரங்களை நடலாம். விவசாய நிலங்களில் வேளாண் காடுகள் அமைக்கலாம். நம் நதிகளுக்கு வருடம் முழுவதும் நீர் கிடைப்பதை ஈரப்பதமான நிலம் உறுதிசெய்து கொள்ளும். அதுமட்டுமல்ல, வெள்ளம், வறட்சி, மண் இழப்புகளையும் சரிகட்டி, விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும்.