மண்நிகழ்ச்சிகள்ஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்
Sadhguru on motorcycle with Save Soil sign, alongside child
Sadhguru on motorcycle with Save Soil sign, alongside child

மண்காப்போம் நடைபயணம்

ஜூன் 2022

2045ம் ஆண்டுக்குள், நாம் தற்போது உற்பத்தி செய்வதைவிட 40% குறைவான உணவை உற்பத்திசெய்வோம், உலக மக்கள்தொகையோ 930 கோடியாக உயர்ந்திருக்கும். அத்தகைய உலகில் வாழ நீங்கள் விரும்பமாட்டீர்கள், உங்கள் குழந்தைகளை அத்தகைய உலகில் விட்டுச்செல்ல விரும்பமாட்டீர்கள். - சத்குரு


  • 52%

    விவசாய மண் ஏற்கனவே வளமிழந்துவிட்டது

  • 200 கோடிக்கும்

    அதிகமான மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் அவதிப்படுகின்றனர்.

  • ஒரு தேக்கரண்டி மண்ணில்

    பூமியில் உள்ள மனிதர்களைக் காட்டிலும் அதிக நுண்ணுயிர்கள் உள்ளன.

இந்த தந்தையர் தினத்தில்

மண்காக்க நடைபயணம் சென்று நம் குழந்தைகளின் வருங்காலத்தை பாதுகாப்போம்

இந்த ஜூன் மாதம், வட & தென் அமெரிக்காவில், 60க்கும் மேற்பட்ட நகரங்களிலுள்ள, ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து, மண்காப்பது குறித்து விழிப்புணர்வு உருவாக்க நடந்திடுங்கள். அடுத்த பத்தாண்டுகாலம், இந்நிலையை மாற்ற நமக்கு இருக்கும் வாய்ப்பாகும், நம்மால் இதைச் செய்யமுடியும். மண்காக்க நாம் ஒன்றாக நடந்திடுவோம்.

Walkathon Icon

இந்த நடைபயணம் 3கி.மீ. - 5கி.மீ. வரை இருக்கும்

Family Icon

உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழந்தைகளை உடன் அழைத்துவாருங்கள்

மண்காப்போம் இயக்கம்

மண் காப்போம் இயக்கம், மண்வளம் அழிவது குறித்து விழிப்புணர்வு உருவாக்கவும், மண்ணில் கரிமவளத்தை அனைத்து தேசங்களிலும் குறைந்தது 3-6% அளவுக்கு உயர்த்தி மண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான கொள்கைகளை உருவாக்கவும், சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள உலகளாவிய இயக்கமாகும்.

திட்டம்

இவ்வியக்கதின் நோக்கம்:

  • மண் அழிவு குறித்து விளக்கி விழிப்புணர்வு உருவாக்குவது
  • மண் ஆரோக்கியத்தை பாதுகாக்க கொள்கை மாற்றம் உருவாக்குவது
  • இந்த கொள்கைகளை ஆதரிக்க 350 கோடி மக்களை ஊக்குவிப்பது

நாம் இதனை நிகழச்செய்வோம்!

செயல்படுவோம்
footerLogo

மண்

© 2022 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions