தொடக்கம்
2003ல், சத்குரு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கிராமம் கிராமமாகச் சென்று யோகா நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த மூன்று நாள் நிகழ்ச்சிகள், மக்கள் ஒன்றுகூடி விளையாடும் ஒரு நிகழ்வுடன் முடிவடைவதாக இருந்தன. சமூக மாற்றத்தைக் கொண்டுவரும் ஈஷா கிராமோத்சவத்திற்கான விதைகளாக அவை அமைந்தன. முதல் கிராமோத்சவம் 2004ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 140 அணிகள், 50000 பார்வையாளர்கள் முன்னிலையில் விளையாடின.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினரும் தினமும் விளையாடுவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதன் மூலம், தனிநபர்களையும் சமூகங்களையும் விளையாட்டு எவ்வாறு மாற்றியமைக்கும் என்பதற்கான சிறப்பான ஒரு முன்மாதிரி இது.
இது சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகிய தடைகளைத் தகர்த்து, இளைஞர்கள் போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும், சிறுவயதிலிருந்து வெளியில் வந்து விளையாடாத பெண்கள், விளையாட்டின் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான ஒரு தளத்தை இது வழங்குகிறது.

கிராமோத்சவத்தின் நோக்கம்
கிராமப்புற இந்தியாவில் 60% க்கும் அதிகமானோர் வேலை செய்யும் வயதில் உள்ளவர்களாக உள்ளனர். இருப்பினும், விவசாயத்தில் முன்னேற்றமின்மை மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியின்மையின் காரணமாக, தங்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சவால்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். கிராமப்புற இளைஞர்கள் வறுமையில் வாடும் நிலையும், போதைக்கு அடிமையாகும் சூழலும் இருப்பதைப் பார்க்கிறோம். ஈஷா கிராமோத்சவம் என்பது, கிராம மக்களின் வாழ்வில் உற்சாகத்தை மீட்டெடுத்து, கிராமப்புற சமூகத்தில் கொண்டாட்ட உணர்வை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
விளையாட்டுகள் மூலமும், கிராமிய பாரம்பரிய கலைகளை அரங்கேற்றுவதன் மூலமும், கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விடுபட உதவுதல், சாதிய தடைகளை உடைத்து, பெண்களுக்கு வல்லமை அளித்தல், கிராமங்களில் குறைந்துவிட்ட உற்சாகத்தை மீட்டெடுத்தல் ஆகியவற்றின் மூலம் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு சிறந்த கருவியாக ஈஷா கிராமோத்சவம் மாறியுள்ளது.
கிராமோத்சவப்
பயணம்

தாக்கம்
2,02,000+
வீரர்கள்
17,000+
அணிகள்
30,000+
கிராமங்கள்
38,600+
வீராங்கனைகள்
விருதுகளும் அங்கீகாரங்களும்





எங்களுடன் பங்காளர் ஆகுங்கள்
கிராமப்புற சமூகங்களின் வாழ்வை மாற்றியமைப்பதில் எங்களுடன் துணைநில்லுங்கள்
எங்களுடன் தொடர்பில் இருப்பதற்கு:

