
மற்றவர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட தன்னார்வலர்களின் ஆதரவின்றி பெரிய அளவிலான சமூக மாற்றம் நிகழ முடியாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நேர்மறையான மாற்றத்திற்கான ஒரு செயல் ஊக்கியாக மாறவும், விளையாட்டின் சக்தியால் ஒரு தலைமுறையை நல்வாழ்வை நோக்கி கொண்டுசெல்லவும் நாங்கள் உங்களை அழைக்கிறோம். நாம் ஒன்றிணைந்து, கிராமப்புற சமூகங்களுக்கு வல்லமை அளிப்போம்; மேலும், இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு பிரகாசமான, ஒருங்கிணைந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்குவோம்.
ஏன் தன்னார்வத்தொண்டு
கிராமப்புற இந்தியாவை மாற்றியமைத்தல்
கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் ஆழமான மற்றும் நீடித்து நிலைக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இது அவர்களை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான பாதையில் செலுத்துகிறது.
தனிப்பட்ட வளர்ச்சி
பல்வேறு வகையான செயல்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், பல்வேறு சூழல்களை எதிர்கொள்ளும்போது, இதுவரை வெளிப்படாத உங்களது திறன்கள் வெளிப்படுகிறது.
மன நிறைவு
கிராமப்புற சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நிறைவின் ஆனந்தத்தை உணர்ந்திடுங்கள்.
தன்னார்வத்தொண்டு புரியும் வழிகள்

ஒரு கள தன்னார்வலராக, கிராம மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்துவதில், கிளஸ்டர் தன்னார்வலர்கள் மற்றும் ஈஷாங்காக்களுக்கு உதவிபுரியும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதற்கான பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, நீங்கள் ஈடுபட முடியும்.
நீங்கள் ஈஷா யோக மையத்தில் குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு தன்னார்வத்தொண்டு புரிய வேண்டியிருக்கும். உங்களது முதன்மையான பங்களிப்பானது, களத்தில் உள்ள தன்னார்வலர்களின் செயல்பாடுகளில் துணைநிற்பதாக இருக்கும். மேலும், யோக மையத்திற்குள் உள்ள பல்வேறு துறைகளிலிருந்து அவர்கள் ஏதேனும் தகவல் அல்லது உதவியைப் பெறுவதற்கான ஒரு ஊடகமாக நீங்கள் செயல்படுவதாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பதிவு நடவடிக்கைகள், விளம்பரப்படுத்துதல், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அக்கவுண்ட்டிங் ஆகியவற்றில் நீங்கள் உதவியாக இருக்கலாம்.
பதிவு மற்றும் பிற விஷயங்கள் குறித்து ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' தொடர்பான அழைப்புகளுக்கு பதிலளிப்பதிலும், பதிவு செயல்பாடுகளிலும், சமூக ஊடகங்களில் பரப்பக்கூடிய Reels மற்றும் வீடியோக்களைத் தயாரிப்பது மற்றும் ஆவணப்படுத்துவது போன்ற செயல்பாடுகளிலும் களநிலை தன்னார்வலர்களுக்கும், திரைக்குப் பின்னால் இருந்து செயல்படும் தன்னார்வலர்களுக்கும் நீங்கள் துணைநிற்க முடியும்.
தன்னார்வத்தொண்டு பற்றி ஒரு பார்வை
இதற்கான படிகள்

தன்னார்வத்தொண்டு படிவத்தை நிரப்புங்கள்
3 நாட்களுக்குள் ஒரு அழைப்பைப் பெறுவீர்கள்
7 நாட்களுக்குள் பதிலைப் பெறுவீர்கள்

