பதிவுக்கான விதிகள்:
1. ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம். பதிவு மற்றும் அணிக்கான நுழைவுக் கட்டணம் இலவசம். (வட்டார (divisional) அளவிலான போட்டிகளிலிருந்து பயணத்திற்கான உதவிக்கட்டணம் வழங்கப்படும்).
2. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒரே கிராமப் பஞ்சாயத்து/டவுன் பஞ்சாயத்தில் இருப்பவர்களாக இருக்கவேண்டும். இருப்பினும், ஒரே பஞ்சாயத்திலிருந்து எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். நகர மற்றும் மாநகராட்சிப் பகுதியிலிருந்து வரும் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாது..
3. ஒரு அணியில், குறைந்தபட்சமாக 6 வீரர்களும் ஒரு மாற்று வீரரும் இருக்கவேண்டும்(6+1), அதிகபட்சமாக 6 வீரர்கள் மற்றும் 6 மாற்று வீரர்கள் (6+6) இருக்கலாம். ஒரு வீரர் ஒரு அணியில் மட்டுமே பங்கேற்க முடியும்.
4. குறைந்தபட்ச வயது: 14 வயது. அதிகபட்சம்: அதிகபட்ச வயதுவரம்பு இல்லை, ஒருவர் உடல் தகுதியுடன் இருந்தால் போதுமானது.
5. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பஞ்சாயத்தைச் சேர்ந்த அணிகளில் பங்கேற்கலாம். இருப்பினும், ஒரு அணியாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் ரிசர்வ் அணிகள் பங்கேற்க அனுமதிக்கப்படாது. விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், போட்டியின் எந்த கட்டத்திலும் அணி தகுதி நீக்கம் செய்யப்படும்.
6. பின்வரும் வீரர்களும் போட்டியில் பங்கேற்க முடியாது.
a. சர்வதேச அணி வீரர்கள்: இந்திய அணியின் சார்பில் மற்ற சர்வதேச அணிகளுக்கு எதிராக விளையாடியவர்கள்.
b. தேசிய வீரர்கள்: தங்களது மாநில அணி சார்பாக, மற்ற இந்திய மாநில அணிகளுக்கு எதிராக விளையாடியவர்கள்.
c. நியமன வீரர்கள்: மத்திய அல்லது மாநில அரசு அணிகள் மற்றும் தனியார் நிறுவன அணிகள் சார்பாக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிய வீரர்கள்.
d. மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழக வீரர்கள், ஒருங்கிணைந்த பல்கலைக்கழகங்களுக்கு (தெற்கு மண்டலம்) தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் படிவம் 3(Form 3) வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை. விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், போட்டியின் எந்த கட்டத்திலும் அந்த அணி நிராகரிக்கப்படும்.
e. யாரேனும் ஒருவர் இந்த விதியை மீறினால், போட்டியின் எந்தவொரு கட்டத்திலும் அந்த அணி மொத்தமாக நிராகரிக்கப்படும்.
போட்டிக்கான விதிகள்
1. போட்டி நடைபெறும் நாளில், ஒவ்வொரு வீரரும் தங்களின் ஒரிஜினல் ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும். வீரர்கள் தங்கள் ஒரிஜினல் அடையாள அட்டைகளைக் காட்டத் தவறியிருந்தால், அனைத்து வீரர்களின் அடையாள அட்டைகளையும் சரிபார்த்த பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும். விளையாட்டு வீரர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவைப்படும் கூடுதல் அடையாள ஆதாரங்களை சரிபார்க்கும் உரிமையை நிர்வாகக் குழு கொண்டுள்ளது. எந்த அணியினராவது தங்களது ஒரிஜினல் ஆதார் அட்டையை காட்டத் தவறினால், அந்த அணி எந்த கட்டத்திலும் நிராகரிக்கப்பட்டு, அடுத்த இடத்திலுள்ள அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். மறுபோட்டிகள் நடத்தப்படாது.
2. அணியின் பங்கேற்பு தொடர்பான இறுதிமுடிவு நிர்வாகக் குழுவால் எடுக்கப்படும்.
3. போட்டிகள் நாக்அவுட்/லீக் அடிப்படையில் நடத்தப்படும்.
4. முதலாவது போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட அணியின் புகைப்படத்திலுள்ள அணி வீரர்கள் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியும். முதற்கட்டப் போட்டிக்குப் பிறகு அணியின் வீரர்களை மாற்றமுடியாது.
5. போட்டிகளை அல்லது போட்டி விதிகளை எந்த கட்டத்திலும் மாற்றுவதற்கு நிர்வாகக் குழுவிற்கு உரிமை உண்டு.
6. மது அருந்திய/எந்த வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க தடைசெய்யப்படுவார்கள்.
7. அணியின் முக்கிய வீரர்கள் 6 பேரும் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து, போட்டி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அவர்கள் அங்கிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
8. போட்டி தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக அணியின் வீரர்கள் வரத்தவறினால், எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
9. கிளஸ்டர் நிலை போட்டிகளுக்கு Standing Method பின்பற்றப்படும். பிரிவு மற்றும் இறுதி நிலை போட்டிகளுக்கு Rotational Method பின்பற்றப்படும்.
10. எதிரணிக்கு/எதிரணி வீரருக்கு எதிராக ஒரு அணிக்கு புகார் இருக்கிறதென்றால், முறையான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும். புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அணி/வீரர் போட்டியின் எந்தவொரு கட்டத்திலும் வெளியேற்றப்பட்டு, அடுத்த இடத்தில் இருக்கும் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். மறுபோட்டிகள் நடத்தப்படாது.
11. சில வீரர்கள்/எதிர் அணிகள் பங்கேற்பதற்கு எதிராக ஏதேனும் புகார் இருந்தால், குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட வேண்டும். அதன்பின் அளிக்கப்படும் புகார்கள் நடவடிக்கைக்காக பரிசீலிக்கப்படாது. புகார் மற்றும் ஆதாரம் உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அணியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
12. நடுவரின் முடிவே இறுதியானது.
13. போட்டியின் போது குழுவின் கேப்டன் மட்டுமே நடுவர் அல்லது மேலாண்மைக் குழுவுடன் பேச முடியும். பயிற்சியாளர்கள் மற்றும் மற்ற வீரர்கள் வாதிட அனுமதி இல்லை. இவ்வாறு நடந்தால், அக்குழு போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும்.
14. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை எந்தவொரு அணியாவது மீறினால், அந்த அணி போட்டியின் எந்தவொரு கட்டத்திலும் வெளியேற்றப்படும்.
பொதுவான விதிகள்

ஆபத்து பற்றிய புரிதல்:
ஈஷா கிராமோத்சவத்தில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆபத்துகளை பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டு புரிந்துகொள்கிறார்கள். காயம் ஏற்படுதல், பொருட்சேதம் அல்லது போட்டியின்போது ஏற்படக்கூடிய பிற பாதிப்புகள் போன்ற அனைத்து அபாயங்களையும் தாங்களாகப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறார்கள்.
பொறுப்புத் துறப்பு:
பங்கேற்பாளர்கள் தங்கள் சார்பாகவும், அவர்களின் வாரிசுகள், நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் சார்பாகவும், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், நிதியுதவியாளர்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள் மற்றும் அனைத்து தொடர்புடைய தரப்பினர்களுக்கும் போட்டியில் பங்கேற்பதால் தங்களுக்கு ஏற்படும் காயங்கள், சேதங்கள் அல்லது இழப்புகளுக்கான அனைத்து பொறுப்பிலிருந்தும் விடுவித்து விலக்களிக்கின்றனர்.
இழப்பீடு:
போட்டியில் பங்கேற்பதால் எழும் உரிமைக்கோரல்கள், கோரிக்கைகள், சட்டப்பூர்வ வழக்குகள் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்கவும், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், நிதியுதவியாளர்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும், பாதிப்பில்லாமல் வைத்திருக்கவும் பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அத்தகைய உரிமைக்கோரல்கள் அல்லது செயல்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாக தற்காத்துக்கொள்வதற்காக ஏற்படும் செலவுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு திருப்பிச் செலுத்தவும் பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
மருத்துவ சிகிச்சை:
போட்டியின்போது காயம் ஏற்பட்டால் தேவையான மருத்துவ சிகிச்சை அல்லது அவசர சிகிச்சை பெற பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மருத்துவ சிகிச்சையுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் பங்கேற்பாளர்கள் ஏற்க ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், அத்தகைய சிகிச்சையால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் பொறுப்பேற்கவும் ஒப்புக்கொள்கிறார்கள்.
நடத்தை விதிகள்:
போட்டியின் விதிகள், நெறிமுறைகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களால் அந்தந்த நேரத்தில் பரிந்துரைக்கப்படும் நடத்தைவிதிகளைக் கடைப்பிடிப்பதற்கு, பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். பங்கேற்பாளர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கத் தவறினால், ஒருங்கிணைப்பாளர்களால் போட்டியிலிருந்து எவ்வித கேள்விக்கும் இடமின்றி நீக்கப்படலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
