தலைவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள்

தொடங்குங்கள்
மண்ஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்
Background

கான்சியஸ் ப்ளானட்

கான்சியஸ் ப்ளானட் என்பது, நம் சமுதாயங்களின் பன்முக செயல்களும் விழிப்புணர்வான நிலைக்கு நகரும்விதமாக, மனித விழிப்புணர்வை உயர்த்தி, இணைத்துக்கொள்ளும் உணர்வைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகும். மனித செயலை இயற்கைக்கும் பூமியிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உறுதுணையாக இருக்கும்விதமாக இணக்கமாக்கும் முயற்சியிது.

மேலும் வாசிக்க

மண் காப்போம் இயக்கம், கீழ்க்காணும் விதங்களில் வேலைசெய்யும்:

1

உலகின் கவனத்தை ஆழிந்துவரும் மண்ணிற்கு திருப்பும்.

2

இவ்வியக்கம், உலகத்தின் மொத்த வாக்காளர்களான 526 கோடி மக்களில் 60 சதமான 400 கோடி மக்களை, மண்ணைக் காக்கவும் பேணி வளர்க்கவும் நிலைக்கச் செய்யவுமான கொள்கை மாற்றங்களை உருவாக்க ஊக்கப்படுத்த விழைகிறது.

3

மண்ணின் கரிமப்பொருளை 3 முதல் 6 சதத்திற்கு உயர்த்தி, அதைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கு 193 நாடுகளில் தேசிய அளவிலான கொள்கை மாற்றங்களை உருவாக்க விழைகிறது.

Soil Revitalization

Global Policy Draft Recommendations & Sustainable Soil Management

மேலும் காண
soil
background
Sadhguru

சத்குரு

யோகியாக, ஞானியாக, தொலைநோக்குப் பார்வையுடையவராக விளங்கும் சத்குரு, நம் காலத்தில் வாழும் மனிதர்களுள் உலகில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்களில் ஒருவராவார். அளப்பரிய ஆற்றலுடைய ஞானோதயமடைந்த குருவான சத்குரு, மிகச் சவாலான பலவித பணிகளைக் கையிலெடுத்து மாபெரும் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறார்.

எனினும் அவர் முயற்சிகள் அனைத்திற்கும் எப்போதும் ஒரே நோக்கம்தான், அது மனித விழிப்புணர்வை உயர்த்துவதுதான். கடந்த 40 ஆண்டுகளாக, நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்களை சத்குரு உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு தனது அறக்கட்டளைகள் மூலமாக வழங்கியுள்ளார். உலகெங்கும் 1.6 கோடி தன்னார்வலகள் இப்பணியில் உதவுகின்றனர். சத்குரு, தேசத்திற்கு ஆற்றும் சிறப்பான சேவைக்காக பத்ம விபூஷன் விருது, 2010ம் ஆண்டில், இந்தியாவின் உயரிய சுற்றுச்சூழல் விருதான இந்திரா காந்தி பார்யவரன் புரஸ்கார் உட்பட, மூன்று ஜனாதிபதி விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் வாசிக்க

மண் காப்போம்: 24 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இயக்கம்

முப்பது ஆண்குகளுக்கு மேலாக, சத்குரு தொடர்ந்து மண்ணின் முக்கியத்துவம் குறித்தும், மண்வளம் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் குறித்தும் இடையறாது விழிப்புணர்வு உருவாக்கி வருகிறார். பல்வேறு சர்வதேச மேடைகளில் சத்குரு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இதைத்தான்: "மண் நம் உயிர், நம் உடலே மண்தான். நாம் மண்ணை கைவிட்டால், பலவிதங்களில் பூமியையே கைவிடுகிறோம்."

Save Soil Banner

மண்ணை யார் காப்பாற்றுவார்கள்?

Tree

1990களின் கிராமிய தமிழ்நாட்டில், ஒருசிலர் கூடி, பரந்துவிரிந்து அடர்ந்த இலைகளுடன் நின்ற ஒரு மரத்தின் நிழலில் கண்மூடி அமர்ந்தனர். அதற்கு சற்று நேரம் முன்புவரை அவர்கள் வெட்டவெளியில், வெயிலில், தாகத்துடன், வியர்வை வடிய, தென்னிந்தியாவின் சுட்டெரிக்கும் சூரியனின் கீழ் அமர்ந்திருந்தனர். இப்போது பசுமையின் பாதாகாப்பான நிழலில், குளிர்காற்று வீச அமர்ந்திருக்கையில், அந்த பெரிய மரத்தின் வரப்பிரசாதத்தை உணர்ந்தனர்.

அப்போது சத்குரு அவர்களை ஒரு உள்நிலை தியான செயல்முறைக்கு வழிநடத்தினார், அப்போது தங்கள் சுவாசக்காற்றை அந்த மரத்துடன் பகிர்ந்துகொண்டதை அவர்கள் அனுபவப்பூர்வமான உணர்ந்தனர் - அவர்கள் வெளிமூச்சாக விட்ட கரியமில வாயுவை மரங்கள் உள்ளெடுத்தன, மரங்கள் வெளிவிட்ட பிராணவாயுவை அவர்கள் உள்மூச்சாக எடுத்தனர். இந்த அனுபவப்பூர்வமான செயல்முறையில், அவர்கள் சுவாசிப்பதற்கு உதவும் உறுப்பின் ஒருபாதி வெளியே மரமாக நிற்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இவ்வியக்கத்திற்கு ஆரம்பமாக விளங்கிய இந்த சமயத்தில்தான், சத்குரு, "மிகக்கடினமான பரப்பான மக்கள் மனங்களில்" மரங்களை நடுவதற்குத் துவங்கியதாகச் சொல்வார். இந்த நேரடி அனுபவம்தான், நம் பூமிக்கு புத்துயிரூட்டும் இவ்வியக்கத்தில் ஆர்வத்துடன் களமிறங்கிய முதலாவது தன்னார்வத் தொண்டர்களை உத்வேகப்படுத்தி உருவாக்கியது.

1990களில் வனஸ்ரீ என்ற பெயரில் சில ஆயிரம் தன்னார்வத் தொண்டர்களுடன் வெள்ளியங்கிரி மலையை பசுமையாக்கும் நோக்குடன் துவங்கப்பட்ட சூழலியல் திட்டம், 2000ற்குப் பிறகான முதலாவது தசமத்தில் தமிழகமெங்கும் பல லட்சம் தன்னார்வத் தொண்டர்களுடன் மாநிலம் தழுவிய இயக்கமாக உருவெடுத்தது. 2017ல், சத்குரு துவங்கிய நதிகள் மீட்பு இயக்கம், 16.2 கோடி இந்தியர்களின் ஆதரவுடன் உலகிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாகியது. இது, தீவிரமான களப்பணியில் ஈடுபடக்கூடிய, நேரடியாக செயலாற்றக்கூடிய முன்மாதிரித் திட்டமான காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வித்திட்டது. இப்போது கோடிக்கணக்கான உலக மக்களை இணைத்துக்கொண்டு, வரலாறு காணாத இயக்கமாக விழிப்புணர்வான உலகை உருவாக்கி மண்ணைக் காக்க செயலாற்றி வருகிறது. உலகில் 400 கோடி மக்களுக்கு இந்த விழிப்புணர்வை சேர்க்கும் சத்குருவின் பணி, முப்பது ஆண்டுகால உழைப்பு மற்றும் வளர்ச்சியின் விழைவாக நடந்துவருகிறது.

இவ்வியக்கதின் வளர்ச்சிக்கு காரணமான மிக முக்கிய அம்சங்களுள் ஒன்று, இது பலகோடி மக்களை ஊக்குவித்துள்ளதுதான். இது தொடர்ந்து பலதரப்பட்ட மக்களை ஒரே நோக்கத்துடன் செயல்செய்ய களமிறங்கச் செய்வது, இதன் இன்னொரு முக்கிய அம்சம். அருகிலுள்ள மக்கள் சமுதாயங்கள், நிறுவனங்கள், விவசாயிகள், பள்ளிகள் மற்றும் மாநில அரசுகளின் ஈடுபாட்டுடன், இன்று நதிகளை மீட்க தேசிய அளவிலான நதிக் கொள்கைக்கு வடிவம் கொடுக்க இவ்வியக்கம் உதவியுள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கான மிக முக்கிய சர்வதேச அமைப்புகள், உலகத் தலைவர்கள் மற்றும் அரசுகளுடன் இணைந்து, இத்திடம் கடந்த முப்பதாண்டுகளாக வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

மண் காப்போம் இயக்கத்தின் இந்த மாபெரும் முயற்சி, உலகெங்கும் ஜனநாயக தேசங்களின் குடிமக்களை ஒன்றிணைத்து பூமியின் ஆரோக்கியத்திற்காகவும் வருங்காலத்திற்காகவும் ஒரே குரலாக பேசவைக்கும். சூழலியல் பிரச்சனைகள் தேர்தல் பிரச்சனைகளாக உருவெடுக்க வேண்டும்; மண்ணைக் காக்க நீண்டகால கொள்கைகள் இயற்ற, அரசுகளுக்கு மக்கள் ஆதரவின் வல்லமை கிடைக்க வேண்டும்; தனிமனிதர்களும் அரசுகளும் மண் ஆரோக்கியத்திற்கு பிரதானமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அப்போதுதான் இந்த இடையறா முயற்சிக்கு பலன் கிடைக்கும்.

இந்தப் பயணம், பசுமை மனங்களில் துவங்கி, பசுமைக் கரங்களாக உருவெடுத்து, பசுமை இதயங்களாகப் பரிணமித்துள்ளது. எனவே மண்ணை யார் காப்பாற்றுவார்கள்? நாம் ஒவ்வொருவரும் மண்ணைக் காப்போம்.

நாம் இதனை நிகழச்செய்வோம்!

Hands-with-mud

நாம் இதனை நிகழச்செய்வோம்!

செயல்படுவோம்

மண்

© 2024 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions