மண்ணின் மாயாஜாலம்
“மரணத்தை உயிராக மாற்றும் ஒரே மாயாஜால மூலப்பொருள்”
– சத்குரு
மண் காப்போம் இயக்கம், மண்ணின் மாயாஜாலத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள மனிதகுலத்தை ஒன்றுதிரட்டுவதற்கானது.
Save Soil குறும்படத்தைக் காணவும்
ஆனால்...
உண்மையில் மண் என்பது என்ன? மண் என்ன செய்கிறது?
கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில் தெரிகிறதா என பார்ப்போம்
கேள்வி 1 / 6
மண் என்பது ______
மண்தான் நம் வாழ்க்கைக்கு ஆதாரமானது. ஆனால்...
விவசாயம், காடுகள் அழிக்கப்படுவது, மற்றும் பிற காரணிகள் அதிர்ச்சிக்குரிய வேகத்தில் மேல்மண்ணை வளமிழக்கச்செய்து அரித்துவிட்டது. உலகளவில் 52% விவசாய நிலம் ஏற்கனவே வளம் குன்றிவிட்டது. பூமியே பெரும் பிரச்சனையின் விளிம்பில் இருக்கிறது. தற்போதைய வேகத்தில் தொடர்ந்து மண் வளமிழந்தால், நம் வாழ்க்கைக்கே இது முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
மோசமாக வளம்குன்றிய மண்
வளம்குன்றிய மண்
ஸ்திரமான மண்
தாவரங்கள் இல்லாத மண்
பூமியே பெரும் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது
உணவுப் பிரச்சனை
இன்னும் 20 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 40% குறையும் என்று கணிக்கப்படுகிறது, ஆனால் மக்கள் தொகை 930 கோடியாக உயர்ந்திருக்கும்.
வளமில்லா மண், உணவில் ஊட்டச்சத்து இல்லாமல் செய்துவிடும். இன்று காய்கறிகளிலும் பழங்களிலும் முன்பு இருந்ததைவிட 90% குறைவான ஊட்டச்சத்தே உள்ளது.
200 கோடி மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தண்ணீர் பற்றாக்குறை
வளமில்லா மண்ணால் தண்ணீரை உறிஞ்சி நீர்நிலைகளில் நீரோட்டத்தை சீர்படுத்த முடியாது.
மண் நீரைப் பிடித்துவைக்காவிட்டால், அதனால் தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படமுடியும்.
கரிமப்பொருளால் அதன் எடையில் 90% எடைக்கு தண்ணீரை பிடித்துவைத்து, மெதுமெதுவாக வடியவிட முடியும். அடிக்கடி வறட்சி ஏற்படும் பகுதிகளுக்கு இது பெரிதும் உதவும்.
பல்லுயிர்கள் அழிவு
தங்கள் வாழ்விடம் அழிந்துவருவதால் ஆண்டுதோறும் தோராயமாக 27,000 உயிர்வகைகள் அழிகின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இந்தப் பிரச்சனை எந்த அளவு பெரியது என்றால், 80% பூச்சிகள் அழிந்துவிட்டன.
பல்லுயிர்கள் அழிவது, அவற்றின் வாழ்விடமான மண்ணை மேலும் பாதித்து, மண்ணின் மீளுருவாக்கத்தைத் தடுக்கிறது.
பருவநிலை மாற்றம்
மண்ணில் சேமிக்கப்படும் கார்பன், உயிருள்ள தாவரங்களால் சேமிக்கப்படுவதைவிட 3 மடங்கு அதிகமானது, காற்று மண்டலத்தில் சேமிக்கப்படுவதைவிட 2 மடங்கு அதிகமானது. அதாவது காற்றிலுள்ள கரிமத்தை தன்மயமாக்க மண்வளம் இன்றியமையாதது.
உலகத்தின் மண்ணுக்கு புத்துயிரூட்டவில்லை என்றால், அது 85,000 கோடி டன் கரியமில வாயுவை காற்று மண்டலத்திற்குள் வெளியேற்றும், இது கடந்த 30 ஆண்டுகளில் மனிதர்கள் வெளியேற்றியுள்ள அளவைவிட அதிகமானது.
வாழ்வாதார இழப்பு
மண்வளம் அழிவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்
உலகெங்கும் நிலவளம் அழிவதால், 74% ஏழை மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
மண்வளம் அழிவதால், உலகில் 10.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான செலவு ஏற்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மோதல்கள் & மக்கள் இடம்பெயர்தல்
மக்கள்தொகை அதிகரிப்பதும் உணவு மற்றும் தண்ணீர் பற்றக்குறையும், 2050ற்குள், 100 கோடிக்கும் அதிகமான மக்களை வேறு பகுதிகளுக்கும் நாடுகளுக்கும் இடம்பெயரச்செய்யும்.
ஆப்பிரிக்காவில் 1990 முதல், 90 சதத்திற்கும் அதிகமான பெரிய போர்களுக்கும் மோதல்களுக்கும் நிலப் பிரச்சனைகள் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
பிரெஞ்சு புரட்சி முதல் அராப் ஸ்ப்ரிங் வரை பல போராட்டங்களுக்கு அதிகரித்துவரும் உணவுப்பதார்த்தங்களின் விலையும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மண்: முழுமையான தீர்வு
ஏரத்தாழ ஒவ்வொரு பெரிய அளவிலான சூழலியல் பிரச்சனையும், ஓரளவிற்கோ ஏதோவொருவகையிலோ மண் அழிவின் விளைவாகவோ அறிகுறியாகவோ இருக்கிறது. அதேபோல, ஏரத்தாழ சுற்றுச்சூழல் அல்லது சூழலியல் சார்ந்த ஒவ்வொரு பிரச்சனையையும், ஆரோக்கியமான மண்ணை உருவாக்கினால் சரிசெய்திட முடியும்.
முழுமையாக சரிசெய்ய முற்படாமல் சுற்றுச்சூழலில் ஏதோவொரு அம்சத்தை மட்டும் சரிசெய்ய முடியும் என நினைப்பது உண்மையில் முட்டாள்தனமானது, ஏனென்றால் சூழலியலில் எந்தவொரு அம்சமும் தனித்து இயங்குவதில்லை. வாழ்க்கை என்பது எல்லாம் ஒருங்கே நிகழும் ஒரே சிக்கலான பிரம்மாண்டமான நிகழ்வு என்ற விழிப்புணர்வு நமக்கு வரும்வரை, எந்தவொரு தீர்வும் முழுமையாக இருக்காது. மண்ணை நாம் சரிசெய்தால், முழுமையாக சரிசெய்வதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
அறிவியல் என்ன சொல்கிறது?
S.O.S - Save Our Soil - மண் காப்போம்?
மண் மேலாண்மை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
பல்லுயிர்கள்
உலகளவில் ஆண்டுதோறும் 2,400 டன் வளமான மண் அழிவதோடு, 27,000 உயிர்வகைகளும் அழிந்துவருகின்றன.
ஐ.நா. அறிக்கை: உலகின் வேளாண் நிலங்கள் 'அழிவின் விளிம்பில்' உள்ளன
பருவநிலை மாற்றம்
உலகில் பருவநிலை மாற்றத்திற்கு வழிவகுத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விவசாய & வேளாண் முறைகளை மாற்றி, நீடிக்கக்கூடிய நிலையான விவசாய முறைகளுக்கு நாம் உடனடியாக மாறவேண்டும்.
ஓ மண்ணே
மண்ணின் நறுமணம்
எப்படியோ எனக்கு
மலரின் ஆடம்பர நறுமணத்தை விட மிக அன்னியோன்யமானது
மண் ஏந்தும் உயிர்த்தன்மையின்
உறுதியும் கூருணர்வும்
அலையலையாய் வேட்கையை வெளிப்படுத்துகிறது
அது வேறுவித வேட்கை.
ஒரு மனிதரின் வேட்கையில்லை
தனக்கு ஊட்டம்கொடுக்கும் அனைத்துக்கும்
இறுதியில் தன்னை எடுத்துக்கொள்வதற்கும்
உணர்வற்றுப்போன
என் இனத்தின் வேட்கை.
நான் வெறும்காலில் நடக்கையில்
வர்ணனைகள் அனைத்தையும் கடந்த
சொல்லவொண்ணா வேட்கையில் உடைந்துபோகிறேன்.
ஓ மண்ணே, என் உயிரே
சத்குருவின் கவிதை
நாம் இதனை நிகழச்செய்வோம்!