சிறந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு
ஈஷா அவுட்ரீச் ஊக்குவித்து வரும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பான "வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்" அவுட்லுக் பத்திரிகை வழங்கிய "சிறந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு"-க்கான விருதை பெற்றது.
கிராமப்புறங்களில் ஈஷாவின் சமூக பணிகளை அங்கீகரிக்கும் வண்ணம் ஐ.நா சபை தன் பொருளாதார மற்றும் சமூக கூட்டமைப்பிற்கு (ECOSOC) ஆலோசனை வழங்கும் தகுதியை ஈஷா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளது. ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்க தன்னார்வலர்களுக்கு பின்வரும் விருதுகளையும் அங்கீகாரங்களையும் சமர்ப்பிக்கிறோம்.
ஈஷா அவுட்ரீச் ஊக்குவித்து வரும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பான "வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்" அவுட்லுக் பத்திரிகை வழங்கிய "சிறந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு"-க்கான விருதை பெற்றது.
காமன்வெல்த் விளையாட்டு காபி மேஜை புத்தகத்தில் "வளர்ச்சிக்கான விளையாட்டு" என்ற பகுதியில் ஈஷாவின் வெற்றிகரமான செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
பஞ்சாயத்து யுவ கிரீட அவுர் கேல் அபியான் (PYKKA) தமிழ்நாட்டில் முதன்மை பயிற்சியாளர் பயிற்சி திட்டத்தை செயற்படுத்த ஈஷாவுடன் இணைந்தது. ஈஷாவின் "ஒரு பந்து உலகையே மாற்றும்" என்ற ஆவணப்படத்தை இந்த பயிற்சி திட்டத்தில் PYKKA சேர்த்தது.
பஞ்சாயத்து யுவ கிரீட அவுர் கேல் அபியான் (PYKKA) என்ற திட்டத்தின் தேசிய நிபுணர் குழுவில் ஈஷா அவுட்ரீச் அங்கம் வகிப்பதற்கு யுனிசெப்பும், மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகமும் முன்மொழிந்தன.
தொலைதூர கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு வழங்கியதற்காக, ஈஷா அவுட்ரீச்சிற்கு 2010ம் ஆண்டின் "டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி விருது" வழங்கப்பட்டது.
ஜெ.எஸ்.பி.எல். பவுண்டேஷன் என்ற அமைப்பு தேசிய அளவிலான விருதை "உத்வேக மாதிரி ஆரோக்கியம்" என்ற வகையில் ஈஷா அவுட்ரீச்சிற்கு 2016ம் ஆண்டு வழங்கியது.
ஹார்ட் கேர் பவுண்டேஷன் ஆப் இந்தியா (HCFI) என்ற அமைப்பு 2018-ஆம் ஆண்டு "ஹெச்.சி.எஃப்.ஐ - சி.எஸ்.ஆர் கிராமப்புற விருதை" ஈஷா அவுட்ரீச்சுக்கு வழங்கியது.
சுற்றுசூழலுக்கான விளையாட்டு விருதை 2010-ஆம் ஆண்டு "பியாண்ட் ஸ்போர்ட்" என்ற அமைப்பு வழங்கியது.
விளையாட்டை ஊக்குவிக்கும் ஈஷா அவுட்ரீச்சை தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாக 2018-ஆம் ஆண்டு மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது.
விளையாட்டை ஊக்குவிக்கும் ஈஷா அவுட்ரீச்சை தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாக 2018ம் ஆண்டு மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது.