ஈஷா கிராம மருத்துவமனைகள் கிராமப்புற மக்களுக்கு தரமான மற்றும் மலிவான மருத்துவ வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஈஷா மருத்துவமனைகள், கிராமத்தில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் , உளவியல் மற்றும் சமூக அக்கறை கிடைக்க கூடிய ஒரு சிறந்த நிரந்தர மையத்தை உருவாக்கும் வண்ணம் செயல்படுகின்றது.
தற்போது கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் மூன்று ஈஷா கிராம மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மருத்துவமனையும் அதனை சுற்றியுள்ள 30 முதல் 50 கிராமங்களுக்கு சேவை செய்கிறது.