தீபாவின் கதை
என் பெயர் தீபா. 27 வயது. எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ளது. நான் வேலைக்காக கோவைக்கு மாற்றம் ஆனேன். நான் நீண்ட காலமாக மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.
தீபாவின் கதை
என் பெயர் தீபா. 27 வயது. எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ளது. நான் வேலைக்காக கோவைக்கு மாற்றம் ஆனேன். நான் நீண்ட காலமாக மிகவும் சோர்வாக உணர்ந்தேன். எனது அன்றாட வேலைகளை என்னால் செய்ய முடியவில்லை. அந்த இயலாமையால் என் கணவர் தொடர்ந்து என்னைத் திட்டி வந்தார். நான் பல மருத்துவர்களை அணுகினேன், அவர்கள் எனது இரத்த அளவு குறைவாக இருப்பதாக சொன்னார்கள். ரத்த பரிசோதனை செய்யும்படி என்னை வற்புறுத்தினார்கள். எனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் செல்ல எனக்கு நேரமும் தேவையான ஆதரவும் இல்லை. சோதனைக்குத் தேவையான தொகையும் என்னைத் தொந்தரவு செய்தது. எனவே எனது பிரச்சினைகளுடன் தொடர்ந்து வாழ்ந்தேன். முட்டத்துவயலில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனை குறைந்த செலவில் இரத்த பரிசோதனைகள் செய்து வருவதை சமீபத்தில் அறிந்தேன். எனவே, நான் அங்கு சென்றேன், நான் ஒரு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர் வலியுறுத்தினார். அதை நான் செய்தேன். முடிவுகள் வந்தன. எனது ரத்தத்தில் உள்ள அளவு 5.9 கிராம் / டி.எல் இருப்பதாக மருத்துவர் கூறினார். பெண்களுக்கு சாதாரணமாக எச்.பி. (ஹீமோகுளோபின் ) அளவு 12 முதல் 15 கிராம் / டி.எல் வரை இருக்கும் என்றும், எனக்கு அது குறைவாக உள்ளது பற்றியும் தெளிவுபடுத்தினார். மேலும், அவர் இரும்பு மற்றும் மல்டிவைட்டமின் சிரப் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளையும் கொடுத்தார். சத்தான உணவு பற்றி விளக்கினார். நான் இப்போது மீண்டு வருகிறேன், முன்பை விட மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறேன். குறைந்த செலவில் ஆய்வக மற்றும் மருத்துவ வசதி வழங்கி , நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் ஈஷா கிராம மருத்துவமனைக்கும் மருத்துவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.