கிராம புத்துணர்வு இயக்கம், நடமாடும் மருத்துவமனைகள் (MHC) மூலம் கிராம மக்களுக்கான மருத்துவ உதவியை அவர்களின் வீட்டு வாசலிலே வழங்குகிறது. இம்மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஒரு சில தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் 6 முதல் 7 கிராமங்களுக்கு சென்று இலவச ஆரம்ப மற்றும் சிறு அவசர சிகிச்சையையும் சுகாதார கல்வியையும் வழங்குகிறார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அதே கிராமத்திற்குச் சென்று ஒவ்வொரு மாதமும் சுமார் 2,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
குறிப்பாக, வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், மலிவான அதே சமயத்தில் தரமான சுகாதார வசதி இல்லாமை. எளிய சுகாதார முறைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் , எளிய பிரச்சனைகள் பெரிய சிக்கல்களாக மாறுகிறது.