ஆரோக்கியம்
- தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த 1800 கிராமங்களில் உள்ள 43,84,711 க்கும் மேற்பட்ட மக்கள் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இலவச ஆரம்ப மருத்துவ உதவி பெற்றுள்ளனர்.
- ஈஷா கிராமப்புற மருத்துவமனைகள் மூலம் 4,73,799 பேர் ஆரம்ப சுகாதார சிகிச்சைகள் பெற்றுள்ளனர்.
- 2022 ஆரோக்கிய அலை முகாம்கள் மூலம் 3,47,517 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சுத்தம் & சுகாதாரம்
- திட கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் தொண்டாமுத்தூரை சேர்ந்த 950 குடும்பங்கள் பயன் பெறுகின்றனர்.
- தொண்டாமுத்தூர் பகுதியில் 486 கழிப்பறைகள் தரப்பட்டுள்ளன.. அதன் மூலம் 3800 கிராம மக்கள் பயன்பெற்றுள்ளார்கள்.. அந்த பகுதியில் மேலும் 82 கழிப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
கிராமிய உள்ளங்களுக்கு புத்துயிர் ஊட்டுதல்
- ஈஷா கிராமப்புற யோகா நிகழ்ச்சிகள் மூலம் 92,520 பேர் 2018-19 ஆம் ஆண்டில் யோகா பயின்றனர்.
- 2018-2019 ஆம் ஆண்டில், 988 கைப்பந்து மற்றும் எறிபந்து குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- கிராமப்புற இந்தியாவின் வளமையான கலாச்சாரத்தை பறைசாற்றும் வண்ணம் 14 ஈஷா கிராமோத்சவம் பெருவிழாக்கள் இது வரை நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும், தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும் நிறைவு நாள் கொண்டாட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகின்றனர் .
பேரிடர் நிவாரணம்
- சுனாமி, வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் மறுவாழ்வும் வழங்கப்பட்டது.
விவசாயிகள் மேம்பாடு
- தமிழ்நாட்டின் முதல் இடத்தில் உள்ள வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் அமைப்பு 1063 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
ஏரிகள் தூர்வாருதல்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பொருளுதவியில் 1.6 கோடி மதிப்பிலான திட்டத்தின் மூலம் குறிச்சி குளம் தூர் வாரப்பட்டது. இதன் மூலம் 3,36,849 கன மீட்டர் அளவு தண்ணீர் சேமிப்பளவு அதிகரித்துள்ளது.
முந்தைய திட்டங்கள்
- 2008-12: 10 படுக்கைகள் கொண்ட சமூக பராமரிப்பு மையம் & மருத்துவமனை 3,945 எச்.ஐ.வி.நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பராமரிப்பும் ஆதரவும் அளிக்கவும் செயற்பட்டு வந்தது.
- எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கை: கோவை மாவட்டத்தில் உள்ள 100 கிராமங்களில் உயர் ஆபத்துக் குழுக்களாக அறியப்பட்ட வர்களிடம் ம் எச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கை எடுத்ததன் மூலம் 17,000 மக்கள் பயன் பெற்றனர்.
- 2008: ஈஷா- மேற்கு ஆப்பிரிக்கா திட்டம்: சியரா லியோன் நாட்டின் திவாய் தீவு மற்றும் பிரீடௌன் ஆகிய இடங்களில் உள்ள 10 சமூகங்களுக்கு யோகப்பயிற்சி, விளையாட்டு, விவசாய நிலங்களை மறுபயன்பாடு செய்தல் மற்றும் பல்வேறு விவசாயமுறைகளின் நுட்பங்கள்ஆகியவை கற்றுக்கொடுக்கப்பட்டன.
- 2010-12:, - நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையை சேர்ந்த 276 மலைக்கிராமங்களில் வசிக்கும் 42,000 பழங்குடி மக்களின் உடல் நலம் மேம்பட ஆயுஷ் – ஈஷா பாரம்பரிய நல்வாழ்வு திட்டம் என்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒருங்கிணைந்த ஆரோக்கிய நலத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.