ஆற்றல் வாய்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய தன்னார்வலர்களின் துணையோடு நிகழ்த்தப்படும் ஈஷாவின் பணிகள் உலகெங்கிலும் உள்ள மனிதர்களுக்கான மேம்பாட்டிற்கும் சமூகங்கள் புத்துயிர் பெறுவதற்குமான வாழும் வழிமுறை ஆகும்.
இளம் வயதிலேயே ஒரு குழந்தைக்கு படைப்பாற்றலும் தங்கள் உடல் நலனுக்கும் சுற்றுசூழலுக்கும் சிறந்தது எது என்பதைப் பற்றிய புரிதலும் பெரியவர்களை விட அதிகம் இருப்பத்தை நாம் காணலாம். அரசு பள்ளிகள், இளைஞர் படைகள் மற்றும் மன்றங்களோடு ஈஷா இணைந்து செயல்படுகையில், ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கான பணிகளில் முக்கியமான பங்கேற்பாளர்கள் குழந்தைகள் என்பது பலமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற குழந்தைகளை கிராமங்களுக்கு அழைத்து வந்து கிராமப்புற சூழலை, வாழ்க்கை முறையை அங்குள்ள குழந்தைகளிடம் கலந்துரையாடி, அனுபவத்தில் அறிந்து கொள்ள செய்வது நகர்ப்புற குழந்தைகளுக்கு கிடைக்கும் விலைமதிக்க முடியாத ஒரு வாய்ப்பாக அமையும். இதன் மூலம் அவர்கள் சிறு வயதிலேயே திறந்த உள்ளத்தோடும் மேம்பட்ட புரிதலுடனும் இருப்பார்கள்.