loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

முக்கியமான பங்களிப்பார்கள்

divider-1
ஆயுஷ் அமைச்சகம்

ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி அமைச்சகம் சுருக்கமாக ஆயுஷ் என்று அழைக்கப்படுகிறது.  இந்திய அரசின் அங்கமாக இருக்கும் இந்த அமைச்சகம் ஆயுர்வேதம், யோகம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி. இந்தியா நிறுவனம்

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் புதைபடிவ எரிபொருள் சுரங்கத் துறை மற்றும் வெப்ப ஆற்றல் உற்பத்தியில்  இந்திய அரசின் நவரத்தின நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் நெய்வேலி மற்றும்   ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பார்ஸிங்ச்சர் பகுதியில் இருக்கும் சுரங்களில் இருந்து ஆண்டுதோறும் 3 கோடி டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கின்றது.

சோழா

சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம் இந்தியாவில் நிதி மற்றும் முதலீட்டு சேவைகளை வழங்கி வரும்  நிறுவனம். சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 1029 கிளைகள் உள்ளன. முருகப்பா குழுமத்தின் 28 வணிக நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

பால்கிருஷ்ணா தொழில்துறை நிறுவனம் (பி.கேடி.)

பால்கிருஷ்ணா தொழில்துறை நிறுவனம் (பி.கேடி.) மும்பையில் அமைந்துள்ள டயர் தயாரிப்பு நிறுவனம். அவுரங்காபாத், பீவாடி, சோபான்கி, டோம்பிவழி மற்றும் புஜ் ஆகிய இடங்களில் ஐந்து தொழிற்சாலைகளை கொண்டுள்ள இந்த நிறுவனம் சுரங்கம், மண் அகழ்வு, விவசாயம் மற்றும் தோட்டம் போன்ற பிரத்யேகமான துறைகளில் இயங்கும் சாலைவழிச் செல்லா ஊர்திகளுக்கான  டயர்களை தயாரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்)

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவிகளை வழங்கும் நோக்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம்.

சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (எஸ்.எப்.எ.சி.)

சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (எஸ்.எப்.எ.சி.) என்பது இந்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு , மற்றும் உழவர் நல அமைச்சகம் ஊக்குவிக்கும் ஒரு தன்னாட்சி சங்கமாகும். சங்கங்கள் பதிவு சட்டம் XXI, 1860-இன் கீழ் 18, ஜனவரி, 1994-ஆம் ஆண்டு இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டது.

விவசாயம் மற்றும் உழவர் நல்வாழ்வுத்துறைக்கனா மாண்புமிகு மத்திய அமைச்சரை தலைவராகக் கொண்ட மேலாண்மைக் குழுவால் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இந்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் செயலர் இந்த அமைப்பின் துணைத்தலைவராக இருந்து செயற்படுகிறார்.

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம்

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் ராம்கோ குழுமத்தைச் சார்ந்த சென்னையை தலைமையிடமாக கொண்ட ஒரு வணிக நிறுவனம். ஆயத்தக் கலப்புக் கற்காரை மற்றும் உலர்காரை பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் காற்றாலை மின்நிலையங்களையும் இயக்கி வருகின்றது.

இந்திய விமான நிலைய ஆணையம்

இந்திய விமான நிலைய ஆணையம் இந்திய அரசின் குடிமக்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சட்டரீதியான அமைப்பு. இந்தியாவின் குடிமக்களுக்கான விமான நிலைய உள்கட்டமைப்புகளை அமைப்பது, மேம்படுத்துவது, பராமரிப்பது மற்றும் நிர்வகிப்பது என பல பொறுப்புகளை கொண்டது இந்த அமைப்பு.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (TANSACS)

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (TANSACS) 1993-1994-களில் தொடங்கப்பட்டது. சங்கங்களின் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (TANSACS) என்ற சங்கமாக பதிவு செய்யப்பட்டது. நாட்டில், இந்த வகையில்  பதிவு செய்யப்பட்ட முதற்சங்கம் இது. இந்த சங்கத்தின் தலைவர் தமிழ்நாடு மாநில சுகாதார செயலர். மேலும் உறுப்பினர் செயலர் மற்றும் திட்ட இயக்குனராக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்படுவார்.

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்களோடு கூட்டமைப்பில் இயங்கி வரும்  ஒரு அமைப்பு. இந்திய அரசு, யு.எஸ்.எயிட், வி.எச்.எஸ் ஆகியவற்றின் முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியோடு செயல்படும் இந்த அமைப்பின் திட்டங்களை வி.எச்.எஸ். நிர்வகிக்கிறது.

யு.எஸ்.எயிட் பிரேம் தி அமெரிக்கா பீப்பிள் (அமெரிக்க மக்களிடமிருந்து உதவி)

யு.எஸ்.எயிட் பிரேம் தி அமெரிக்கா பீப்பிள் (அமெரிக்க மக்களிடமிருந்து உதவி) என்பது உலகின் முதன்மையான சர்வதேச மேம்பாட்டு நிறுவனம். பல மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கும் அமைப்பு இது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை வளர்க்கும் பணிகளை மேற்கொண்டுள்ள யு.எஸ்.எயிட் அமெரிக்கர்களின் பெருந்தன்மையை பறைசாற்றுகிறது. அதன் உதவியை ஏற்பவர் தற்சார்பு மற்றும் விரிதிறனுக்கான பாதையில் செல்வதை ஊக்கப்படுத்துகிறது.

நமது ஆதரவாளர்கள்

divider-1
ஜி.எம்.ஆர். குழுமம்

இன்று ,ஜி.எம்.ஆர். குழுமம் உள்கட்டமைப்பு துறையில் இயங்கி வரும் ஒரு முதன்மையான நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல உலகத்தரம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஜி.எம்.ஆர். குழுமம் புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ளது. உயர் வளர்ச்சி பகுதிகளான விமான நிலையம், ஆற்றல், போக்குவரத்து மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகள் சார்ந்த மேம்பாட்டு திட்டங்களை இந்த நிறுவனம் செயற்படுத்தி வருகிறது.

யெஸ் பாங்க்

யெஸ் பாங்க் நிறுவனம் 2004-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்திய தனியார்த்துறை வங்கி. பெருநிறுவனங்களுக்கான வங்கியாக செயல்படும் இந்த நிறுவனம்  நுகர்வோர் வங்கியாகவும்

ஐ.டி.பி.ஐ. வங்கி

ஐ.டி.பி.ஐ. வங்கி (இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி) 1964-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்திய தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக கடன் மற்றும் மற்ற நிதிவசதிகளை செய்து கொடுப்பதற்காக இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமாக ஆரம்பத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் பின்னர் இந்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது.

கரூர் வைஸ்யா வங்கி

நூறு வருடங்களைக் கடந்தும் செயல்பட்டு வரும் இந்திய வங்கியான ‘கரூர் வைஸ்யா வங்கி’ தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. எம்.எ.வெங்கட்ராம செட்டியார் மற்றும் அத்தி கிருஷ்ண செட்டியார் அவர்களால் 1916-ஆம் ஆண்டு இந்த வங்கி நிறுவப்பட்டது. முதன்மையாக கருவூலம், பெருநிறுவன மொத்த வங்கி மற்றும் சில்லறை வங்கி பிரிவுகளில் இந்த வங்கி செயல்படுகிறது.

ஹீரோ

ஹீரோ - ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் (முன்னர், ஹீரோ ஹோண்டா) புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம். இந்தியா மற்றும் உலகின் மிகப்பெரிய இரண்டுசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹீரோ இந்தியாவின் இரண்டுசக்கர வாகன வகையில் 46 சதவிகிதம் சந்தை பங்கு கொண்டுள்ளது.

ஹலோ எஃப்.எம்.

ஹலோ எஃப்.எம். தமிழ்நாட்டின் பலப்பகுதிகளிலும் செயல்பட்டு வரும் தனியார் வானொலி நிலையம். சென்னை மலர் பதிப்பகத்துக்கு சொந்தமான நிலையம் இது. பண்பலை அலைவரிசைகளில் உரிமம் பெற்ற  வானொலி நிலையமான ஹலோ எஃப்.எம், முதன்முதலில் தன் ஒளிபரப்பை சென்னையிலும் கோவையிலும் துவங்கியது.

மற்ற ஆதரவாளர்கள்

divider-1