செம்மேடு பகுதியை தூய்மையான கிராமமாக மற்றும் செயல் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. முதலில் கிராமக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
திறமையான கழிவு மேலாண்மைக்குரிய தேவை மற்றும் அதனால் மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் விளையும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு கல்வி அந்த கிராம மக்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு நிறத்தினாலான குப்பைத்தொட்டிகள் கொடுக்கப்பட்டன: ஒன்று மக்கும் கழிவுகளுக்கும் மற்றோன்று மக்காத கழிவுகளுக்கும்.
தினமும் காலையில் நமது தூய்மை சேவையாளர்கள் (5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள்) ஒவ்வொரு வீடுவீடாக சென்று அங்குள்ள மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனி தொட்டிகளில் திரட்டிக்கொண்டு வருவார்கள். பின்னர் இந்த கழிவுகள் மின்வாகனங்களில் அருகில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். அங்கும் நமது தூய்மை சேவையாளர்கள் அந்த தொட்டிகளுக்காக காத்திருப்பர்.
குப்பைக்கிடங்கில் கொண்டுவரப்பட்ட கழிவுகள் மறுமுறை நமது தூய்மை சேவையாளர்களால் பிரித்தெடுக்கப்படும் - மக்கா குப்பைகள் அதன் வகையைப் பொருத்து பிரிக்கப்படும் - வெள்ளை நெகிழி, நிறமுள்ள நெகிழி, மூடிகள், தண்ணீர் புட்டிகள் என பல வகைகளில் பிரிக்கப்படும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறுசுழற்சிக்கு உட்படுத்தத்தக்க மக்கா குப்பைகள் அதற்குரியவர்களிடம் விற்கப்படும். மற்ற மக்கா குப்பைகள் ஒரு எரியூட்டப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு எரிக்கப்படும்.
கவனமாக ஆய்வு செய்யப்பட்ட மக்கும் குப்பைகள் உயர் தரமான உரமாக மாற்றப்படும். நமது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கும் விவசாயிகள் இதை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். எந்த கழிவும் வீணாகப்போகவில்லை என்று நாங்கள் உறுதி செய்கிறோம்.
சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் துணையோடு இந்தத் திட்டம் மேலும் ஐந்து கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது - நொய்யல் நகர், ராஜீவ் காலனி, முட்டத்துவயல், செம்மேடு மற்றும் காந்தி காலனி.