திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கதைகள்
சமீபத்தில் கடந்த 2-3 ஆண்டுகளில் எங்கள் கிராமத்தின் திட கழிவு மேலாண்மையை ஈஷா கையில் எடுத்தது
"நான் இந்த கிராமத்திற்கு வந்து 77 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு நினைவு தெரிந்த வரை கிராம சாலைகளிலும் வீட்டின் பின்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டன. நமது மக்களுக்கு குப்பைகளை கையாள்வது குறித்த விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராம நிர்வாகமும் குப்பைகளை சேகரிக்கவும் சாலைகளை சுத்தமாக வைக்கவும் மிகவும் சிரமப்பட்டனர். இந்த மோசமான கையாளுதலால் சாக்கடைகளில் குப்பைகள் அடைத்துக் கொள்ளவதால் பல விதமான தொற்று நோய்கள் எங்கள் சமூகத்தில் பரவின.
சமீபத்தில் கடந்த 2-3 ஆண்டுகளில் எங்கள் கிராமத்தின் திட கழிவு மேலாண்மையை ஈஷா கையில் எடுத்தது.
செம்மேடு பகுதியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் இவர்கள் அதை சரியான முறையில் ஒரு அர்ப்பணிப்போடு செய்கிறார்கள். இப்போது எங்கள் கிராம சாலைகள் மற்றும் வீடுகளின் அருகாமையில் உள்ள இடங்கள் அனைத்தும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்கின்றன. சாக்கடைகளில் கழிவுகள் தேங்குவதில்லை. இதனால் பல விதமான தொற்று நோய்கள் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக எங்கள் கிராமத்தை தூய்மையாக நான் பார்க்கிறேன்.
ஈஷா தூய்மைப்பணிகளுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்."
- நீலகண்ட ஐயர் (77 வயது, செம்மேடு கிராமம்)