ஆரம்பத்தில் அனைவருக்குமான பொதுக் கழிப்பறைகள் கிராமங்களில் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை சுத்தமாகவும் சுகாதாராமாகவும் பராமரிக்கப்படவில்லை. அதனால் கிராம மக்கள் அவற்றை உபாயயோகிப்பத்தை புறக்கணித்தனர். முக்கியமாக பெண்கள் தங்கள் வீட்டிலேயே கழிப்பறை இல்லாத காரணத்தால் பலர் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் காலை கடன்களுக்கு திறந்த வெளியினை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். அதுவும் இருட்டும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். மேலும் தங்களின் பாதுகாப்புக்காக மற்ற பெண்களை உடன் அழைத்துச் செல்லும் தேவையும் இருந்தது. இதன் காரணமாக மக்களின் உபாயயோகத்துக்கு ஏற்றவாறு சுகாதாரமான கழிப்பறைகள் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்திய பிரதம மந்திரி மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் 2019 ஆண்டு உருவாக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நிறைவேறும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.