திட்டங்கள்
கிராம புத்துணர்வு இயக்கம் (ARR) என்பது மக்களுக்கான, முழுமையான ஒரு திட்டமாகும். இவ்வியக்கம் கிராமப்புற மக்களின் வாழ்வில் சாதகமான மாற்ற அலைகளை உருவாக்கி வருகிறது. உடல்நலம், விளையாட்டு, யோகா, சுகாதாரம், வாழ்வாதாரம், சமூக மேம்பாடு மற்றும் சமூக பிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பன்முக அணுகுமுறையே இதன் வெற்றிக்கு காரணம். கிராமவாசிகளின் நல்வாழ்விற்காக செயல்படும் அதே நேரத்தில், கிராமப்புற சமூகங்களில், அவர்களின் சுய உரிமையை/பங்களிப்பை கொண்டுவருவதன் மூலம், திட்டத்தின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்கிறது இவ்வியக்கம்.