இந்திய விவசாயிகளை மீளாக்கடன்களில் இருந்தும் தற்கொலைகளில் இருந்தும் குன்றி வரும் வளங்களில் இருந்தும் மீட்டு அவர்கள் வாழ்வில் செழிப்பும், சந்தையில் அவர்களுக்கான இடத்தை அமைத்தும், நிலைத்தன்மையை உருவாக்குவதே ஈஷாவின் உழவன் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்கும் முயற்சியின் நோக்கமாகும். ஈஷாவின் துணையோடு துவங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் வேளாண்துறை அமைச்சகத்தின் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பின் (எஸ்.எப்.எ.சி.) ஆதரவோடு செயல்படுகிறது. 2013-ஆம் ஆண்டு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதலில் துணை நிற்கின்றது.
நோக்கம்
ஈஷாவின் உழவன் உற்பத்தியாளர் அமைப்பின் நோக்கம் நுண்நிலை மற்றும் பெருநிலை விவசாய தீர்வுகளை அடிமட்ட விவசாயிகளுக்கும் வழங்குவது தான்.
இலக்கு
கிராமப்புற இந்தியாவின் மாற்றத்திற்கான ஒரு கருவியாக உருவாகியுள்ள இந்த அமைப்பு விவசாய பெருமக்கள் ஒன்றிணைந்து இலாபகரமான நிறுவனமாக தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள அவர்களுக்கு உதவிகரமாக இருந்து வழிகாட்டுதலை தன் குறிக்கோளாக கொண்டுள்ளது.