ஈஷா அவுட்ரீச் : பேரன்பின் தீவிரம் கருணையின் உச்சம்
வைரஸ் உலகத்தை சீரழிக்க பார்க்கும் இந்த தருணத்தில், பழங்குடி மற்றும் கிராமப்புற சமூகங்களுக்குள் வைரஸ் நுழையாமல் இருக்க ஒரு செயல் திட்டத்தை ஈஷா அவுட்ரீச் செயல்படுத்திவருகின்றது. இதனால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு, நமது ஈஷா தன்னார்வலர்கள் பல்வேறு வகையான உதவிகளை உறுதியையும், கருணையையும் ஆயுதங்களாக தோளில் சுமந்து கொண்டு வழங்கி வருகிறார்கள். தினசரி உணவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குடிநீரும் வழங்குவதிலிருந்து, தனிமைப்படுத்தும் வார்டுகளை தயார் செய்தல், தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் என பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எதையும் செய்ய நம் தன்னார்வ தொண்டர்கள் உறுதுணையாக நிற்கிறார்கள்.
வாழ்வாதார இழப்பு கிராமப்புற பொருளாதாரங்களை முடக்கி, மக்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. நமது முயற்சி, இம்மக்களின் துன்பத்திற்கோ அல்லது மரணத்திற்கு அடிப்படையாகவோ பசிநோய் ஒரு காரணமாக இல்லாமல் தடுப்பதே ஆகும். இந்த முயற்சிகளில் நீங்களும் பங்கு பெற முடியும்..