ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், விளையாட்டை ஒரு நுழைவு நிலை செயல்பாடாக கிராம சமூகங்களிலிடையே உபயோகிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் நாங்கள் மேற்கொண்ட பணிகளில் இருந்து நாங்கள் கண்ட மிகப்பெரிய நடைமுறை உண்மையாதெனில் பின்தங்கிய கிராமப்புற சமூகங்களில் விளையாட்டு என்பது அவர்களின் உடல் திறத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் சரியான வளர்ச்சி திட்டங்களோடு சேர்த்து செயல்படுத்தினால் அது பரந்த அளவில் புத்துயிர் ஊட்டும் கருவியாகவும் திகழ்கிறது.
விளையாட்டிற்கு மனிதகுலத்தை இணைத்து சமூகங்களை சாதி, மத மரபுகள் சார்ந்த பேதங்களுக்கு அப்பால் அழைத்துச் செல்லும் ஆற்றல் உள்ளது. ஒரு தனிமனிதன் தன்னுடைய தடைகளை கடந்து உற்சாகத்தோடு வாழ்க்கையை நடத்துவதற்கு விளையாட்டு வழிவகை செய்கிறது. ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளைக் குறித்த விழிப்புணர்வை உயர்த்துவதற்கு தேவையான உள்வாங்கும் தன்மையை விளையாட்டு அதிகரிக்கிறது.