அவர்களின் உள்ளத்தில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி கிராமப்புற சமூகங்களில் கொண்டாட்டத்தின் தன்மையை கொண்டு வருவதே எங்கள் நோக்கம். கிராம மக்களை விளையாட்டு ,யோகா மற்றும் "ஈஷா கிராமோத்சவம்" போன்ற திருவிழாக்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்த நோக்கம் வெற்றி பெற்றுள்ளது.
ஈஷாவின் கிராம புத்துணர்வு இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் கிராமோத்சவம் தமிழக கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு உற்சாகமான திருவிழா.
ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழா இறுதியில் 2 நாள் மாபெரும் நிகழ்வாக கொண்டாடப்பட்டு நிறைவு பெறும். கிராமோத்சவத்தின் முக்கியமான அம்சம் "ஈஷா புத்துணர்வு கோப்பை"-க்காக நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிகள் - தமிழகம் எங்குமிருந்து வந்து ஆயிரக்கணக்கான பேர்கள் பங்கேற்கும் ஆண்கள் கைப்பந்து மற்றும் பெண்கள் எறிபந்து, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி இறுதி போட்டிகள்.
இந்த நிகழ்வில் கிராமிய உணவு திருவிழா, கிராமிய கலாச்சார திருவிழா மற்றும் சௌண்ட்ஸ் ஆப் ஈஷா இசை குழுவினரின் ஆர்ப்பரிக்கும் இசை என பல நிகழ்ச்சிகள் நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றி களைகட்டும் - இவை தேவையற்ற நகரமயமாக்கலில் நாம் தொலைத்து விட்ட ஒன்று. தமிழக கிராமிய சாராம்சத்தை பறைசாற்றும் விதமாக கிராமிய விளையாட்டுகள், இயல், இசை, நாடகம் மற்றும் பாரம்பரிய உணவு என்று பல விதமாக படைக்கப்படும் திருவிழா இது. இங்கு நடத்தப்படும் மாநில அளவிலான கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கிராமிய வாழ்க்கையில் விளையாட்டின் பங்கை வெளிக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.
2015-ஆம் ஆண்டு ஈஷா கிராமோத்சவத்தை தலைமை தாங்கிய சச்சின் டெண்டுல்கர் கிராமங்களுக்கு விளையாட்டை கொண்டு செல்லும் ஈஷாவின் முயற்சியை பாராட்டினார். 2004-ஆம் ஆண்டில் இருந்து 12 லட்சத்துக்கும் மேலான மக்கள் ஈஷா கிராமோத்சவத்தின் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர்.
2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்த கிராமோத்சவ விளையாட்டு அணிகள் பங்கு கொண்டனர். 2020-ஆம் ஆண்டு கிராமோத்சவத்தில் தமிழ்நாடு புதுச்சேரி கர்நாடகா தெலுங்கானா ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து வரும் அணிகள் பங்கேற்பார்கள்.