பாலம்மாவின் கதை
ஈஷா நடமாடும் மருத்துவமனை வாரந்தோறும் எங்கள் கிராமத்திற்கு வருகை தந்தாலும், அரசு மருத்துவமனைகளால் மட்டுமே எனது உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இருந்தேன் நான் பாலம்மா , கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதி, புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
என் வயது 67. எனது கணவர் 27 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் திருமணமாகி வேறு இடங்களில் வசிக்கிறார்கள். என்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை.
கடந்த 4 ஆண்டுகளாக, எனக்கு BP , இரத்த சர்க்கரை மற்றும் நீண்டகால வயிற்றுப் புண் ஆகிய பிரச்சனைகள் உள்ளன. ஈஷா நடமாடும் மருத்துவமனை வாரந்தோறும் எங்கள் கிராமத்திற்கு வருகை தந்தாலும், அரசு மருத்துவமனைகளால் மட்டுமே எனது உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்த முடியும் என்று நினைத்தேன். எனவே, நான் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இந்த சிகிச்சைக்காக நான் பஸ்ஸில் குறைந்தது 40 கி.மீ. தூரம் சென்று வருவேன்.
எனக்கு இப்போது வயதாகி விட்டதால், பயணம் செய்வது மிகவும் கடினம். எனவே, பெரும்பாலான நாட்களில் நான் மருத்துவமனை சென்று வருவதை தவிர்த்து விட்டேன், என்னால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியவில்லை. ஒழுங்கற்ற சிகிச்சையின் காரணமாக, எனக்கு அடிக்கடி கடுமையான உடல்நல குறைபாடு வந்தது. எனவே, நான் ஈஷா MHC-யில் சிகிச்சை பெற தொடங்கினேன். என் இடத்திற்கே வந்து, மருத்துவர்கள் சிகிச்சை தந்து, மேலும் இலவச மருந்துகள் கொடுத்து கவனித்துக் கொள்கிறார்கள்.
தற்போது, நான் சிகிச்சையைத் தொடர்ந்து பின்பற்ற முடிகிறது, மேலும் நான் ஆரோக்கியமாக உணர்கிறேன். ஈஷாவின் நடமாடும் மருத்துவமனை வசதியைப் பயன்படுத்த மற்றவர்களை நானாகவே முன்வந்து ஊக்கப்படுத்துகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு இந்த மருத்துவமனைகள் மிகவும் உதவியாக இருக்கின்றது. எங்கள் பகுதியில் என்னைப் போன்றவர்கள் அதிகம் உள்ளனர், அனைவருக்கும் இந்த சேவை ஒரு ஆசீர்வாதம்.
இதைச் செய்த ஈஷாவுக்கு நன்றி!