கொரோனாவிலிருந்து உயிரைக் காத்த சாஷ்டாங்கம் மற்றும் சிம்ம கிரியா!
கொரோனா பாதிப்பால் இக்கட்டான நிலைக்குச் சென்ற தன் கணவரைக் காப்பாற்றிய சாஷ்டாங்கம் & சிம்ம கிரியா பயிற்சிகள் பற்றி ஒரு தன்னார்வலரின் அனுபவப் பகிர்வு!
நமஸ்காரம்,
என் பெயர் கவிதா, கடலூரைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த என் அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் கணவருக்கு கொரோனா உறுதியானதும், அவரது நிறுவனத்தின் மருத்துவரின் அறிவுரைப் படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவம் செய்து வந்தோம். அந்த சமயத்தில், சாஷ்டாங்கம் மற்றும் சிம்ம கிரியா பயிற்சி செய்யச் சொன்னபோது, அவர் அதற்காக முயற்சி செய்யவில்லை.
மீண்டும் தாக்கிய காய்ச்சல்...
இந்நிலையில் காய்ச்சல் குணமாகிவிட்ட நிலையில், திடீரென்று 12ம் நாள் இரவு காய்ச்சலும் தலைவலியும் மிக அதிகமானது; ஆக்சிஜன் அளவும் குறைய ஆரம்பித்தது. அன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. அன்றிரவு மீண்டும் காய்ச்சலும் தலைவலியும் அதிகமானது. மறுநாள் ஆக்சிஜன் அளவு 89-90 வரை குறைந்தது.
இந்நிலையில், அவரை சாஷ்டாங்கம் செய்வதற்கு வலியுறுத்தினேன். 3 மணி நேரத்திற்கு ஒருமுறை, 3 சுற்றுகள் செய்தார்.
4 நாட்களில் டிஸ்சர்ஜ்!
முதலில் மிகவும் சிரமப்பட்டு செய்தாலும், அன்று மாலைக்குள் ஓரளவுக்கு சுலபமாக அவரால் செய்ய முடிந்தது. ஆக்சிஜன் அளவும் மேற்கொண்டு குறையாமல் இருந்தது. அன்றிரவு இருமல் அதிகமாகி நெபுலைசர் வைக்க வேண்டிய நிலை இருந்தது. இருந்தாலும், அடுத்த நாளும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை என சாஷ்டாங்கம், மக்ராசனம் செய்தார்.
அன்றைக்குள் 2 புள்ளிகள் ஆக்ஸிஜன் அளவு உயர்ந்தது. அதன் பின்னர், அவரால் எந்த சிரமமும் இல்லாமல் சுலபமாக பயிற்சி செய்ய முடிந்தது.
4 நாட்களில் ஆக்சிஜன் அளவு 95 - 96 புள்ளிகளை எட்டியது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், "இந்த மருத்துவமனையில் இவ்வளவு விரைவில் குணமானது நீங்கள்தான்!" எனக் கூறி ஆச்சரியப்பட்டார். 4ம் நாளே டிஸ்சார்ஜ் ஆனோம்.
உயிர்காத்த யோகக் கருவிகள்
வீட்டிற்கு வந்தும், சிம்ம கிரியா, சாஷ்டாங்கம் மற்றும் மக்ராசனம் பயிற்சிகளை அவர் தவறாமல் செய்கிறார். அடுத்த 4 நாட்களில் ஆக்சிஜன் அளவு 98 - 99 என ஆனது. சரியான நேரத்தில் பயிற்சி செய்ததாலேயே அவர் விரைவாகவும், அதிக சிரமமில்லாமலும் குணமடைந்தார்.
இந்த உயிர்காக்கும் பயிற்சிகளை அளித்த, எங்கள் குருவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.