>
கிராம புத்துணர்வு இயக்கம்>
வலைப்பதிவு>
களத்தின் கதைகள்>
ஈஷா சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 வாகனங்கள், கோவையில் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது!
Share
ஈஷா சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 வாகனங்கள், கோவையில் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது!
களத்தின் கதைகள்
29 May 2021
05:34 am
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு கோவையில் இன்று (மே 28) மாலை நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் திரு.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் திரு.ராமசந்திரன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. திரு. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன. சுகாதாரத் துறை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் திரு.நாகராஜன், கோவை அரசு மருத்துவமனையின் டீன் திருமதி.நிர்மலா, டி.ஆர்.ஓ.ராமதுரை உள்ளிட்ட அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ திரு.கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும் 500 பி.பி. இ.கிட்கள், 5,000 N95 முக கவசங்கள், 500 CPAP முக கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

இது தவிர, ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் பல்வேறு நிவாரணப் பணிகளை ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் நேரடியாக செய்து வருகின்றனர். கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.

மேலும், தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளை தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags
Related Stories
கொரோனா காலத்தில் மனிதநேயத்தை நிரூபிக்கும் 5 நிகழ்வுகள்: #BeatTheVirus
20 May 2020
11:50 am
உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் சவாலான இந்த சூழ்நிலையில், பல கிராமப்புற மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கும் சூழலுக்கு எப்போதோ சென்றுவிட்டனர். இத்தகைய துன்பமான காலங்களிலும், மிகவும் உத்வேகம் தரும் நிகழ்வுகள் மனிதகுலத்தின் மேன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.
சிறிய கரங்கள் பெரிய உதவி! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 19
13 May 2020
01:25 pm
8 வயதே நிரம்பிய இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விட்டு, சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஈஷா தன்னார்வலர்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினர். #வைரஸைவெல்வோம் என்ற தீவிரமான நோக்கத்துடன் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் பல கிராமப்புற சமூகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
உரிய நேரத்தில் உதவி செய்து உள்ளத்தை தொடும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 12
06 May 2020
12:29 pm
இந்த நோய்த்தொற்று காலத்தில் கிராம மக்கள் முன்னின்று அதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முள்ளாங்காடு கிராமத்தில் உணவு விநியோகிக்க தன்னார்வலர் நவீன் உதவி வரும் வேளையில், உணவை பொட்டலம் கட்டுவதற்காக நரசீபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் தன் 10 ஏக்கர் நிலத்திலிருந்து வாழை இலைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.
Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.