>
கிராம புத்துணர்வு இயக்கம்>
வலைப்பதிவு>
களத்தின் கதைகள்>
மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
Share
மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
களத்தின் கதைகள்
07 Jun 2021
12:21 pm
மதுரை ஈஷா யோகா மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பீ.பீ.குளத்தில் மே 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 370 பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொண்டனர்.

மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மதுரை ஈஷா யோகா மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பீ.பீ.குளத்தில் மே 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 370 பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொண்டனர். முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஈஷா தன்னார்வலர்கள் அர்ப்பணிப்புடன் செய்தனர்.

#IshaCovidAction #BeatTheVirus
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உறுதுணையாக பல்வேறு உதவிகளை ஈஷா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், பி.பி.இ.கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட் நிவாரணப் பொருட்கள், சுகாதார துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் மே 28-ம் தேதி அரசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Related Stories
கொரோனா காலத்தில் மனிதநேயத்தை நிரூபிக்கும் 5 நிகழ்வுகள்: #BeatTheVirus
20 May 2020
11:50 am
உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் சவாலான இந்த சூழ்நிலையில், பல கிராமப்புற மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கும் சூழலுக்கு எப்போதோ சென்றுவிட்டனர். இத்தகைய துன்பமான காலங்களிலும், மிகவும் உத்வேகம் தரும் நிகழ்வுகள் மனிதகுலத்தின் மேன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.
சிறிய கரங்கள் பெரிய உதவி! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 19
13 May 2020
01:25 pm
8 வயதே நிரம்பிய இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விட்டு, சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஈஷா தன்னார்வலர்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினர். #வைரஸைவெல்வோம் என்ற தீவிரமான நோக்கத்துடன் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் பல கிராமப்புற சமூகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
உரிய நேரத்தில் உதவி செய்து உள்ளத்தை தொடும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 12
06 May 2020
12:29 pm
இந்த நோய்த்தொற்று காலத்தில் கிராம மக்கள் முன்னின்று அதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முள்ளாங்காடு கிராமத்தில் உணவு விநியோகிக்க தன்னார்வலர் நவீன் உதவி வரும் வேளையில், உணவை பொட்டலம் கட்டுவதற்காக நரசீபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் தன் 10 ஏக்கர் நிலத்திலிருந்து வாழை இலைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.
Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.