>
கிராம புத்துணர்வு இயக்கம்>
வலைப்பதிவு>
களத்தின் கதைகள்>
சிறிய கரங்கள் பெரிய உதவி! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 19
Share
சிறிய கரங்கள் பெரிய உதவி! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 19
களத்தின் கதைகள்
13 May 2020
01:25 pm
8 வயதே நிரம்பிய இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விட்டு, சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஈஷா தன்னார்வலர்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினர். #வைரஸைவெல்வோம் என்ற தீவிரமான நோக்கத்துடன் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் பல கிராமப்புற சமூகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.

சிறிய கரங்களின்சீரியதொண்டு…
8 வயதே நிரம்பிய சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விடுத்து அவர்களுக்குள் சண்டை போடுவதையும் மறந்தனர். ஈஷா தன்னார்வலர்களோடு சேர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை அவர்களின் குழந்தைத்தனமான போட்டியையும் தணித்தது.
அந்த இரட்டையர் முதலில் தக்காளி அறுவடை செய்வதில் தன்னார்வலர்களுக்கு உதவினார். பின்னர் உற்சாகமாக தங்களுக்கு பிரியமான நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு விநியோகிக்க உதவினர்.
தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்தி கிரிக்கெட் விளையாட அனுமதி பெற்ற சில குழந்தைகள் ஈஷா தன்னார்வலர்கள் தங்கள் கிராமத்தில் நுழைவதைக் கண்டவுடன் தங்கள் ஆட்டத்தை நிறுத்தினர். ஒரு தன்னார்வலர் கூறினார், அவர்கள் எங்களோடு இணைந்து எங்கள் பணிகளில் உதவினர். கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதிலும், ஒருவருக்கொருவர் அக்கறை எடுத்துக் கொள்வதிலும், இந்த குழந்தைகள் அங்குள்ள கிராமப்புற மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
ஆட்டோக்காரர்களின்தன்னார்வம்…
குழந்தையைப் போல அந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ டிரைவர்களும் ஈஷா தன்னார்வலர்கள் அந்த கிராமங்களை அடைந்தவுடன் உதவிக்கு வருகின்றனர். விழிப்புணர்வு பிரச்சாரம் வழங்குவது பொதுமக்களுக்கான அறிவிப்பை வழங்குவது உணவு மற்றும் நிலவேம்பு கசாயம் விநியோகிப்பது என பலப் பணிகளிலும் அவர்கள் உதவ முன்வந்துள்ளனர். இந்த செயல் பல கிராமங்களிலும் நடந்து வருகிறது. மக்கள் மற்றவர் உதவிக்காக முன்வந்துள்ளனர்.

குமார் அண்ணா மற்றும் சசி அண்ணா
தன்னார்வலர்களின் தினசரி பணிகளில் உதவ முதன்முதலில் முன்வந்தவர்களில் குமார் அண்ணாவும் ஒருவர். கிராமப்புற மக்களை பாதுகாப்பதற்காக, கிராமங்களுக்கு சென்றடைந்த ஈஷா களக்குழுவுக்கு அவர் ஆதரவாக இருந்து வருகிறார்.
கிராமத்தில் இருந்து வந்த மற்றுமொரு தன்னார்வலர் சசி அண்ணா கூறினார், சும்மா உட்கார்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி பொழுதை கழித்துக் கொண்டிருந்த எனக்கு, சத்குரு இப்போது, பிறருக்கு ஏதோ ஒருவகையில் உதவியாக இருக்க வாய்ப்பு அளித்துள்ளார்.
ஈஷா தன்னார்வலர்களின் வாகனம் ஒன்றின் கதவு பழுதடைந்த போது சசி அண்ணா ஆட்டோ பழுது பார்ப்பதில் தனக்கிருந்த அறிவை நன்முறையில் பயன்படுத்தி அந்த கதவை சரிசெய்தார்.
தன்னார்வலர்கள் அவரின் அந்த சேவைக்கு பணம் வழங்கிய போது அதை வாங்க மறுத்த அவர், பற்பல வழிகளில் நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள். இது நான் உங்களுக்கு திருப்பி செலுத்தும் ஒரு எளிய வாய்ப்பாக இருக்கட்டும், என்று கூறினார்.

Tags
Related Stories
கொரோனா காலத்தில் மனிதநேயத்தை நிரூபிக்கும் 5 நிகழ்வுகள்: #BeatTheVirus
20 May 2020
11:50 am
உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் சவாலான இந்த சூழ்நிலையில், பல கிராமப்புற மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கும் சூழலுக்கு எப்போதோ சென்றுவிட்டனர். இத்தகைய துன்பமான காலங்களிலும், மிகவும் உத்வேகம் தரும் நிகழ்வுகள் மனிதகுலத்தின் மேன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.
உரிய நேரத்தில் உதவி செய்து உள்ளத்தை தொடும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 12
06 May 2020
12:29 pm
இந்த நோய்த்தொற்று காலத்தில் கிராம மக்கள் முன்னின்று அதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முள்ளாங்காடு கிராமத்தில் உணவு விநியோகிக்க தன்னார்வலர் நவீன் உதவி வரும் வேளையில், உணவை பொட்டலம் கட்டுவதற்காக நரசீபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் தன் 10 ஏக்கர் நிலத்திலிருந்து வாழை இலைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வந்த இடத்தில் கிடைத்த புதிய சொந்தங்கள்: #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 16
10 May 2020
10:45 am
ஊரடங்கு காலத்தில் கிராமப்புற சமூகங்களில் அடைக்கலமும் ஆதரவும் பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாய் உள்ளனர். #வைரஸைவெல்வோம் என்ற நோக்கில் ஒன்றிணைந்து போராடியபடி இருந்த ஒரு பெரிய குடும்பத்தில் அவர்கள் அனைவரும் ஓர் அங்கமாக ஆகிவிட்டனர்.
Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.