>
கிராம புத்துணர்வு இயக்கம்>
வலைப்பதிவு>
களத்தின் கதைகள்>
உரிய நேரத்தில் உதவி செய்து உள்ளத்தை தொடும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 12
Share
உரிய நேரத்தில் உதவி செய்து உள்ளத்தை தொடும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 12
களத்தின் கதைகள்
06 May 2020
12:29 pm
இந்த நோய்த்தொற்று காலத்தில் கிராம மக்கள் முன்னின்று அதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முள்ளாங்காடு கிராமத்தில் உணவு விநியோகிக்க தன்னார்வலர் நவீன் உதவி வரும் வேளையில், உணவை பொட்டலம் கட்டுவதற்காக நரசீபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் தன் 10 ஏக்கர் நிலத்திலிருந்து வாழை இலைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.

தீமையிலும் ஓர் நன்மை
ஒவ்வொரு காலையும் முள்ளாங்காடு கிராமத்தில் நவீனின் குரல் ஒரு அலார மணியோசை போல தெளிவாக ஒலிக்கும். ஈஷா தன்னார்வலர்கள் அந்த கிராமத்தை அடைந்தவுடன் இந்த மாற்றுத்திறனாளி இளைஞர் அவர்களின் வருகையை மற்ற கிராமத்தினருக்கு உரத்த குரலில் தெரிவிக்க ஆரம்பித்துவிடுவார். இப்போது கிராம மக்கள் நவீனின் இந்த உற்சாகத்தை சார்ந்து இருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
துல்லியமான கடிகாரத்தைப் போல நவீன் ஒவ்வொரு நாளும், சுவையான உணவு வந்துவிட்டது, வந்து வாங்கிக்கொள்ளுங்கள்... வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். முன்பு தன் மருத்துவத்துக்கு உதவி செய்த தன்னார்வலர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக நவீன் தானே விருப்பப்பட்டு இந்தப் பணியை செய்து வருகிறார்.
முள்ளாங்காடு கிராம மக்களை மட்டுமல்ல, அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் மற்றவரையும், இந்த சுவையான உணவு ஈர்த்துவிட்டது. தென்னமநல்லூர் பஞ்சாயத்தில் பணியில் இருக்கும் ஒருவர், ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் ஒரு நன்மை, தினமும் பரிமாறப்படும் இந்த சுவையான உணவுதான் என்று புன்னகையோடு கூறினார்.
அதேபோன்ற பாராட்டுக்கள் TT பாளையத்திலும் எதிரொலித்தது. அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் தங்கி இருந்த 22 பேருக்கு தினமும் தங்களுக்கு தேவையான உணவை தயாரிப்பது பெரும் போராட்டமாய் இருந்தது. அவர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் தினமும் வழங்கிய சுவையான உணவு ஒரு பெரும் நிம்மதியை அளித்தது.

வாழை இலைகளை வாரி வழங்கியவர்
உள்ளூரைச் சேர்ந்த தியாகராஜன் அவர்கள் நரசீபுரத்தில் உள்ள தன் 10 ஏக்கர் பண்ணையிலிருந்து வாழை இலைகளை பெற்றுக்கொள்ளுமாறு தன்னார்வலர்களிடம் கூறினார். உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு வாழை இலைகளையும் தயவு செய்து பண்ணையில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று தியாகராஜன் கூறினார். தினமும் உணவு பொட்டலங்களை கட்ட இந்த இலைகள் உபயோகிக்கப்படுகின்றன.

குணம் கொடுக்கும் கை
நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு வயதான மூதாட்டி, தன் மருந்துகள் தீர்ந்ததும் உதவிக்கு ஈஷா தன்னார்வலர்களை அணுகினார். இந்த ஊரடங்கால் எந்தவித மருத்துவ உதவியும் பெற முடியாத 80 வயதுடைய சின்னாள் என்ற மூதாட்டி, ஈஷா தன்னார்வலர்களின் உதவியை நாடினார். அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்த தன்னார்வலர்கள், அவரை கோவை ஈஷா ஆசிரமத்துக்கு அருகே உள்ள ஈஷா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தகுந்த சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்பட்டன. தகுந்த நேரத்தில் தனக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லிய சின்னாள் தன் உடல்நலன் தேறி வருவதாகவும் கூறினார்.
உலகமே நாளையை எண்ணி பதட்டத்துடன் உள்ள சூழலில் கரும்புக்காட்டுப்பதி & பட்டியார்கோயில்பதி பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் மனநிறைவோடும் ஆனந்தத்தோடும் வாழ்கின்றனர். அவர்களின் பெற்றோர்களுக்கோ பட்டினியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது என்பதே பெரும் சவாலான ஒன்று.
கரும்புக்காட்டுப்பதி & பட்டியார்கோயில்பதி ஆகிய பழங்குடி கிராமங்களிலுள்ள இந்த சின்னஞ்சிறு குழந்தைகள்,எந்தவித கவலையுமின்றி நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்கின்றனர்.இவர்களின் பெற்றோரைப் பொறுத்தவரை: ‘நாங்கள் ஒருபோதும் எங்கள் குழந்தைகளை பசியுடன் படுக்கைக்கு அனுப்பக்கூடாது'. #BeatTheVirus pic.twitter.com/WE9M5rXXQJ
— IshaFoundation Tamil (@IshaTamil) May 3, 2020
Tags
Related Stories
கொரோனா காலத்தில் மனிதநேயத்தை நிரூபிக்கும் 5 நிகழ்வுகள்: #BeatTheVirus
20 May 2020
11:50 am
உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் சவாலான இந்த சூழ்நிலையில், பல கிராமப்புற மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கும் சூழலுக்கு எப்போதோ சென்றுவிட்டனர். இத்தகைய துன்பமான காலங்களிலும், மிகவும் உத்வேகம் தரும் நிகழ்வுகள் மனிதகுலத்தின் மேன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.
சிறிய கரங்கள் பெரிய உதவி! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 19
13 May 2020
01:25 pm
8 வயதே நிரம்பிய இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விட்டு, சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஈஷா தன்னார்வலர்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினர். #வைரஸைவெல்வோம் என்ற தீவிரமான நோக்கத்துடன் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் பல கிராமப்புற சமூகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
புலம்பெயர்ந்து வந்த இடத்தில் கிடைத்த புதிய சொந்தங்கள்: #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 16
10 May 2020
10:45 am
ஊரடங்கு காலத்தில் கிராமப்புற சமூகங்களில் அடைக்கலமும் ஆதரவும் பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாய் உள்ளனர். #வைரஸைவெல்வோம் என்ற நோக்கில் ஒன்றிணைந்து போராடியபடி இருந்த ஒரு பெரிய குடும்பத்தில் அவர்கள் அனைவரும் ஓர் அங்கமாக ஆகிவிட்டனர்.
Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.