loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா! ஒரு வருடத்திற்கு மேலாக தொடரும் சேவை!

களத்தின் கதைகள்
26 May, 2021
11:24 AM

தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் பாதுகாப்பாக தகனம் செய்யப்படுகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் உயிரையும் பணையம் வைத்து இச்சேவையை ஒரு வருடத்திற்கு மேலாக செய்து வருகின்றனர்.

ICA_Blog3_Image1

தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் பாதுகாப்பாக தகனம் செய்யப்படுகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் உயிரையும் பணையம் வைத்து இச்சேவையை ஒரு வருடத்திற்கு மேலாக செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
"ஈஷா மயானங்களில், காலமானவர்களை உகந்த சூழலில் நுண்ணுணர்வுடன் விடுவிக்க தன்னார்வத்தொண்டர்கள் அயராது உழைக்கிறார்கள். இது வாழ்வோருக்கும் விடைபெறுவோருக்கும் மிகவும் முக்கியம். ஆசிகள்" என்று தெரிவித்துள்ளார்

https://twitter.com/SadhguruJV/status/1397146314467516416?s=19

ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்களும், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை ஈஷா வழங்கி வருகிறது. மேலும், அனைத்து மயானங்களும் நல்ல முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

blog_alternate_img

இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சேவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சவால் மிகுந்த இப்பணியை மயான ஊழியர்கள் ஈஷாவின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் படி மிகுந்த பாதுகாப்பாக செய்து வருகின்றனர்.

அவர்களின் உடல் நலனில் ஈஷா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தினமும் கப சுர குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயம் வழங்குவது, சத்தான உணவுகளை வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் யோக பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, தேவைப்படும் போது உடனுக்குடன் மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறது.

மேலும், அவர்கள் ஈஷாவின் முறையான பயிற்சியின் காரணமாக, உயிரிழந்தவர்களின் உடல்களை மிகுந்த மரியாதையுடன் தகனம் செய்கின்றனர். இறந்தவர்களின் உறவினர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறார்கள்.

blog_alternate_img

இப்பணியில் ஈஷாவின் பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவளிக்கின்றனர். மேலும், அங்கு கால பைரவர் சன்னதி இருப்பதால் அந்த இடம் ஒரு கோவில் போல் புனிதமாக பராமரிக்கப்படுகிறது.

blog_alternate_img

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மயானத்திற்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் ஈஷா ஊழியர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.