loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

முன்களப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ உதவிகள் போன்ற நம்பிக்கையை வழங்கும் ஈஷா!

களத்தின் கதைகள்
21 June, 2021
1:47 PM

கர்நாடகாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களின் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர். வசதிவாய்ப்பற்ற கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, தன்னார்வலர்கள் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு சென்று உணவு தானியங்கள் மற்றும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ICA blog 8_image1

கொரோனா இரண்டாவது அலை நம்மில் பெரும்பாலோரை வீட்டுக்குள்ளேயே முடக்கியிருந்தபோது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இறப்புகள் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வேளையில், ஈஷா தன்னார்வலர்கள் அனைத்து இடர்பாடுகளையும் கடந்து முன்களப் பணியாளர்கள், நோயாளிகள், பழங்குடி மக்கள் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள வசதிவாய்ப்பற்ற பிற சமூகங்கள் என பலருக்கும் ஊட்டச்சத்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களோடு தங்கள் அக்கறையையும் ஆதரவையும் வழங்கத் துணிந்துள்ளனர்.

கொரோனா கள வீரர்களை கவனித்தல்

மன உறுதியை அதிகரிப்பதற்கும் அயராது களப்பணியாற்றும் மருத்துவ குழுக்களின் பசியைத் தணிப்பதற்கும், கர்நாடகாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெங்களூருவிலுள்ள கொரோனா பராமரிப்பு மையங்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும், சத்தான உணவுகளையும் பானங்களையும் விநியோகிக்கின்றனர். ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு, உடுப்பி, சிக்மகளூர், சிக்கபல்லாபூர் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களிலுள்ள 55 முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறார்கள். கடந்த 45 நாட்களில், தன்னார்வத் தொண்டர்கள் 4.46 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விநியோகித்துள்ளனர்.

ஆரம்பக் கட்டத்தில், உணவுப் பொட்டலங்களின் விநியோகம் 2021 ஜூலை 1ம் தேதி வரை மட்டுமே தொடர திட்டமிடப்பட்டது. ஆனால், உதவியும் தேவையும் அதிகமாக இருப்பதை உணர்ந்த ஈஷா தன்னார்வலர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உணவு மற்றும் உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதிகமான மக்கள் தரமான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, சிக்கபல்லாபூரில் உருவாகிவரும் மருத்துவமனைக்கு ஈசிஜி இயந்திரங்கள், மல்டி-பாராமீட்டர் மானிட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவமனை பராமரிப்பு பொருட்களை ஈஷா வழங்கியுள்ளது.

blog_alternate_img

கிராமங்களில் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள்

தொற்றுநோய் கிராமப்புற பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பைக் கொடுத்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரங்கள் குறைந்துவிட்டதால் கர்நாடக கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் வளங்களின் பற்றாக்குறை நிலவும் சமயத்தில், கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக கடந்த வாரம் ஈஷா தன்னார்வலர்கள் சமூக இடைவெளியுடன் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடித்தபடி தொலைதூர கிராமங்களுக்குச் சென்று, சிக்கபல்லாபூர் மற்றும் அருகிலுள்ள தாலுகாக்களில் 685 நாடோடி பழங்குடியினருக்கு ரேஷன் கிட்களை விநியோகித்தனர்.

கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், சிக்கபல்லாபூர் துணை ஆணையர் R.லதா மற்றும் பிற அரசு அதிகாரிகள் முன்னிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கிட்கள் பழங்குடி சமூக மக்களுக்கு வழங்கப்பட்டன. சிக்கபல்லாபூர் மாவட்ட கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 1600 ரேஷன் கிட்களை விநியோகிக்க ஈஷா தீர்மானித்துள்ளது.

ஆன்லைன் மூலம் உதவி

நேரடியாகச் சென்று உதவுவது தவிர, அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்களில் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்றுநோயை எதிர்கொள்வதில் ஆன்லைன் மூலமாக ஈஷா உதவுகிறது. கடந்த மாதம் முதல், ஈஷாவில் தன்னார்வத் தொண்டு செய்யும் 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் BBMP மற்றும் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆன்லைன் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.