மூன்று தலைமுறை சாம்பியன்கள்
இப்போது 75 வயதாகும் நாகம்மை கடந்த 12 வருடங்களாக எறிபந்து விளையாடி வருகிறார். எறிபந்தின் மூலம் தான் தன் வாழ்க்கையே தொடங்கியதாக அவர் கூறுகிறார்.
இப்போது 75 வயதாகும் நாகம்மை கடந்த 12 வருடங்களாக எறிபந்து விளையாடி வருகிறார். எறிபந்தின் மூலம் தான் தன் வாழ்க்கையே தொடங்கியதாக அவர் கூறுகிறார். அத்தகைய அளவற்ற உற்சாகத்தை தன்னகத்தே கொண்ட அவரின் மகள் மருமகள் மற்றும் பேத்தி என அனைவரும் ஓர் அணியாய் இப்போது கொளப்பலூர் கிராமத்துக்காக விளையாடுகின்றனர். இந்த அணி இதுவரை நடந்த கிராமோத்சவங்களில் மூன்று முறை முதலிடத்தையும் மூன்று முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இன்று நில உரிமையாளரும் தொழிலாளரும் ஒரே அணியில் விளையாடுகின்றனர். பல ஆண்டுகளாக பகைமை பாராட்டி வந்த குடும்பங்கள் அதை விடுத்து வெற்றிக்காக ஒன்றிணைந்து விளையாடுகின்றனர். விளையாட்டு மைதானத்தில் உருவான நட்பு பல ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது - தங்களின் 13 வயதில் ஒரு அணியாக சேர்ந்து விளையாடிய பெண்கள் அணி ஒன்று இப்போது அந்த பெண்கள் திருமணம் ஆகி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று குடியேறிவிட்டாலும் அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஓர் அணியாக திரும்பி வந்து தங்கள் தோழமையை புதுப்பிப்பது மட்டுமன்றி தங்கள் அணியின் வெற்றிக்காக கிராமோத்சவத்தில் விளையாடி வருகின்றனர்.